Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

விஜயா செய்த வேலை. அதிர்ச்சி அடைந்த ரோகினி. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஸ்ருதி போனுக்கு சிக்னல் கிடைக்காமல் மேதை மீதெல்லாம் ஏறி போன் பேச முயற்சி செய்ய விஜய்யா என்னம்மா பண்ற கீழே இறங்கு என இறக்கி என்னாச்சு என்று கேட்கிறார்.

இல்ல ஆண்ட்டி ஜூஸ் ஆர்டர் பண்ணலாம்னு பார்த்தேன் என்று சொல்ல அதுக்கு எதுக்கு ஆர்டர் பண்ணனும் வீட்ல தான் ஒரு கடையே இருக்கே என்று சொல்லி மீனாவை கூப்பிட்டு ஒரு ஆப்பிள் ஜூஸ் போட்டு கொடுக்க சொல்கிறார். ஸ்ருதி ஹனி ஊற்றி ஜூஸ் போட்டு எடுத்து வர சொல்லி ரூமுக்கு சென்று விடுகிறார்.

பிறகு மீனாவும் ஜூஸ் போட்டு எடுத்து வர விஜயா அதை வாங்கி ரோகினியை கூப்பிட்டு சுருதிக்கு கொடுத்து விட சொல்கிறார். இதைப் பார்த்த முத்து என்ன பதவி பறிபோய்டுச்சு போல, அதுக்கு எல்லாம் காரணம் 50 சவரன் நகை தான் அடுத்த வாரமே நீ 51 சவரன் நகையை கொண்டு வந்த அந்த பதவி உனக்கு வந்துடும்.

மீனா 52 சவரன் நகை கொண்டு வந்தா அந்த பதவி அவளுக்கு வந்துடும் இந்த வீட்டை பொறுத்த வரைக்கும் ஜூஸ்தான் சாவிக்கொத்து என கலாய்த்து விடுகிறார். பிறகு ரோகிணி ஜூசை கொடுத்து முடித்த பிறகு ஸ்ருதி நகம்பெற்ற வேண்டும் என்று சொல்லி விஜயாவிடம் நகவெட்டி கேட்க விஜயா அதான் ரோகினி இருந்தால் என்ன அவ பண்ணிவிடுவார் என்று சொல்லி ரோகினி கூப்பிட்டு கை, கால்களில் நகத்தை விட்டு விட சொல்கிறார்‌.

இதனால் கடுப்பாகும் யோகினி இதற்கு முடிவு கட்ட வேண்டும் என திட்டம் போட்டு தன்னுடைய தோழியை சந்தித்து ஐந்தாயிரம் கொடுத்து அதை ஐம்பது ரூபாய் நோட்டுகளாக மாற்றி எடுத்து வர சொல்லி விஜயாவிடம் கொண்டு வந்து கொடுத்து இனிமே உங்களுக்கு மாசம் மாசம் பாக்கெட் மணி மாதிரி பணம் தரப் போறேன் என்று சொல்லி ஐஸ் வைக்கிறார்.

பணத்தைப் பார்த்ததும் விஜயா என் புருஷன் கூட இதுவரைக்கும் என்கிட்ட இப்படி கட்டு கட்டா பணத்தை கொடுத்தது கிடையாது என்று சந்தோஷப்படுகிறார். இதையெல்லாம் வெளியிலிருந்து நோட்டம் விட்ட மனோஜ் ரோகினி உள்ளே சென்ற பிறகு வீட்டுக்குள் வந்து அம்மாவிடம் பணம் வேண்டும் என கேட்க அவர் என்கிட்ட பணம் எதுவும் இல்லை என்று சொல்ல அதான் ரோகிணி கொடுத்த பணம் இருக்கே என்று கேட்டு ஷாக் கொடுக்கிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Siragadikka aasai serial episode update
Siragadikka aasai serial episode update