தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் முத்துவை நிற்க வைத்து கேள்வி மேல் கேள்வி கேட்கும் மீனா நீங்க எனக்கு என்ன வந்ததுன்னு நீங்க காலையில எழுந்து சந்தோஷமா வேலைக்கு கிளம்பிடுவீங்க ஆனா நான் தான் ஒவ்வொருத்தருடைய முகத்திலும் முழிக்க முடியாம ரூம்லயே அடைந்து கிடக்கணும். ஊசி குத்துற மாதிரி வார்த்தையால எல்லாரும் கொல்வாங்க ஒரு நாள் குடிகாரன் பொண்டாட்டியா இருந்து பாருங்க அப்போ என்னுடைய கஷ்டம் உங்களுக்கு தெரியும் என்று திட்டிவிட்டு மீனா படுத்து விடுகிறார்.
மறுநாள் காலையில் மீனா ஸ்ருதிக்கு காபி கொண்டு வந்து கொடுக்க அதை குறித்து காபி சூப்பர் என பாராட்டி நேற்று நடந்த விஷயங்களை பற்றி பேச மீனா பதில் பேச முடியாமல் இருக்கிறார். பிறகு ரோகிணியும் வர மீனா அவருக்கும் காபி கொடுக்க சுருதி காபி நல்லா இருக்குல்ல என்று கேட்க தினமும் குடிக்கிற காபி தானே என்று சாதாரணமாக பதில் சொல்ல நல்லா இருந்தா நல்லா இருக்குன்னு அவங்கள பாராட்டிக்கிட்டே இருக்கணும் என்று கூறுகிறார்.
அதைத்தொடர்ந்து ஸ்ருதி மற்றும் ரோகினி மீனாவை உட்கார வைத்து முத்து பற்றி பேசி காயப்படுத்துகின்றனர். நம்ப ரெண்டு பேரோட ஹஸ்பண்ட் முத்து மாதிரி இல்ல அவங்கள நம்ப கண்ட்ரோல்ல வச்சுக்கணும் என ஸ்ருதியும் ரோகிணியும் பேசிக் கொள்கின்றனர்.
இவர்கள் மூவரும் சிரித்து பேசுவதை பார்த்த விஜயா இவங்க என்ன ஒண்ணா உக்காந்து பேசுகிறார்கள் அப்போ நமக்கு என்ன மரியாதை இருக்கும் என்று அதிர்ச்சியடைய அண்ணாமலை விஜயாவை கூட்டிச்சென்று இப்படி மூன்று மருமகளோட சந்தோஷமா இருக்கணும் தானே ஆசைப்பட்ட அவங்க மூணு பேரும் ஒற்றுமையா இருக்காங்க பாரு என்று சொல்கிறார்.
ஆனாலும் இவர்கள் பேசுவதை பிடிக்காத விஜயா மீனாவிடம் வந்து காபி கேட்க மீனா எழுந்து கொள்ள ஸ்ருதி உட்காருங்க முழுசா கதையை கேட்டுட்டு போங்க நீங்க போய் காபி எடுத்துக்கோங்க ஆன்ட்டி என்று விஜயாவை அனுப்பி வைக்கிறார்.
அடுத்ததாக ஸ்ருதியின் அம்மா 50 சவரன் நகையுடன் வீட்டுக்கு வந்து அதை சுருதிக்காக கொடுக்க ரோகினி இவ்வளவு நகை கொடுத்தா அதுக்கு அப்புறம் ஸ்ருதிக்கு தானே மரியாதை அதிகமா இருக்கும் நம்மள மதிக்க மாட்டாங்க என்று நடுங்குகிறார்.
விஜயா நகை பார்த்ததும் வாயை பிளக்க அண்ணாமலை இதெல்லாம் வேண்டாம் இதை வாங்கிக்கிட்டா உங்க வீட்டுக்காரர் சொன்னா மாதிரி பணத்துக்காக எங்க பையன உங்க பொண்ணோட பழக விட்ட மாதிரி ஆகிடும் என்று மறுப்பு தெரிவிக்க அதை எல்லாம் மறந்திடுங்க என்று ஸ்ருதியின் அம்மா சொல்ல விஜயா அவங்க பொண்ணுக்காக அவங்க பண்றாங்க அதை ஏன் நாம தடுக்கணும் என்று கூறுகிறார்.
பிறகு ரவி மற்றும் ஸ்ருதியை வைத்து நகையை வாங்கிக் கொள்ள வைக்கிறார். உங்க முதல் மருமக மலேசியாவில் இருந்து வந்திருக்க நிறைய நகை போட்டு வந்திருப்பார் என்று சொல்ல விஜயா அவங்க அப்பா பெரிய பணக்காரர் கல்யாணத்துக்கு வர முடியல உங்களுக்கு வரும்போது எப்படியும் 150 சவரன் நகைக்கு போடுவாரு இன்று பெருமையாக பேச இரண்டாவது மருமகள் பற்றி கேட்க மீனா ஒன்னும் இல்லாத வீட்டில் இருந்து வந்தவ அவங்க அப்பா உயிரோடு இருந்திருந்தால் அவளுக்கு இன்னும் கல்யாணம் ஆகி இருக்குமா என்று கூட தெரியாது என்று அவமானப்படுத்தி பேசுகிறார்.
மேலும் அவளுக்கு நாங்க தான் நகை போட்டு கூட்டிட்டு வந்தோம், அவளுக்கு அந்த அளவுக்கு எல்லாம் மரியாதை இல்லை என்று சொல்லி பேச மீனா கலங்கி நிற்கிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
Straight Outta Sarpetta Video Song | Anbil Avan | Ashok Selvan | Preity | Govind…
Don’t Trouble The Trouble Title Song Lyrical (Tamil) | Fahadh Faasil, Ssara | Kaala Bhairava
Mozhiye Lyric Video | Baththa | Vijay Sethupathi | @SaiAbhyankkar | Sid Sriram | Balaji…
‘அன்பில் அவன்’ திரைப்படம் தனக்கு மிகவும் திருப்திகரமாக அமைந்துள்ளதாக நடிகை பிரீத்தி முகுந்தன் தெரிவித்துள்ளார். படத்திற்காக தான் மிகவும் கடினமாக…
2022-ம் ஆண்டு வெளியான ‘சர்தார்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகமாக ‘சர்தார் 2’ உருவானது. பி.எஸ். மித்ரன்…
கிரிஷ் ஏ.டி. இயக்கத்தில் நிவின் பாலி, மமிதா பைஜூ நடிப்பில் உருவான ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம், ஓணம் பண்டிகையை…