தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் எல்லோரும் சாப்பிட்டுக் கொண்டிருக்க வேக வேகமாக சாப்பிட்டு முடித்த முத்து மீனாவை கூப்பிட்டு உனக்கு ரூம்ல ஏதாவது எடுக்க வேண்டியது இருக்கா என்று கேட்க எதுவும் இல்ல அப்புறம் எடுத்துக்கிறேன் என்று சொல்ல ஏதாவது எடுக்க வேண்டியது இருந்தா இப்பவே எடுத்துக்க என்று கூறுகிறார்.
பிறகு மீனா துணி துவைக்கணும் என துணிகளை எடுத்துக் கொள்ள அதோடு முத்து போனையும் எடுத்துக்க என்று சொல்லி வெளியே வந்ததுடன் ரூமை சாத்தி கதவை போட்ட மீனா என்ன பண்றீங்க என்று கேட்க விஜயா ஏன்டா ரூமை பூட்டுற என்று கேள்வி கேட்கிறார்.
நான் இதுக்கு மொட்டை மாடியில படுக்கணும் மீனா நாள் முழுக்க கஷ்டப்பட்டு அவன் ஹால்ல படுத்து தூங்கனுமா? இவனுக்கு எல்லாம் யாருமே கொடுக்க முடியாது போய் ரோட்ல படுத்து தூங்க சொல்லுங்க என்று சொல்ல மீனா ரூமை திறந்து விடுங்க என்று சொல்ல உனக்கு தூங்கணும் உங்க அம்மா வீட்டுக்கு போயிடு நான் உன்னை அங்கு வந்து கூட்டிக்கிறேன் என்று கூறுகிறார்.
அதைத்தொடர்ந்து விஜயா மீனாவை நிற்க வைத்து இதுக்கெல்லாம் நீதான் காரணம் நீ அவனை ஏற்றிவிட்டு தான் இப்படி எல்லாம் பேசுற ஒரு நாள் கூட அவனால நீ இல்லாம இருக்க முடியாதா உன்னாலையும் அவன் இல்லாம இருக்க முடியாதா என்று அவமானப்படுத்திவிட்டு போக மீனா கலங்கி நிற்கிறார்.
வெளியே போன ரவி மீண்டும் வீட்டுக்கு வந்து இனிமே இங்கு இருக்க முடியாது ஸ்ருதி வந்தா என்ன நினைப்பா எங்களால யாருக்கும் பிரச்சனை வேண்டாம் நாங்க பழைய வீட்டுக்கு போகிறோம் இல்லன்னா வீட்டுக்கு போறோம் இன்று ரவி விஜயாவிடம் சொல்ல அதிர்ச்சி அடைகிறார்.
ரோகினி நீங்க இப்ப போனீங்கன்னா அப்புறம் உங்களுக்கு ஸ்ருதியை இந்த வீட்டில தங்க வைக்க கூட முடியல என்று மரியாதை குறைந்து போய்விடும் என்று சொல்லி ரவிக்கு புரிய வைக்க முயற்சி செய்கிறார். அது இருந்தாலும் இல்லனா வெளியே போறேன் என்று சொல்ல இறுதியாக விஜயா இதெல்லாம் நீ சுத்திக்கிட்டே சொல்லாத நீங்க சாயங்காலம் வீட்டுக்கு வரும்போது எல்லாம் ரெடியா இருக்கும் என்று கூறி அனுப்புகிறார்.
அதைத்தொடர்ந்து மீனா முத்துவுக்கு தொடர்ந்து போன் பண்ண முத்து போனை எடுக்காமல் இருக்கிறார். செல்வம் ஏண்டா என்ன பிரச்சனை என்று கேட்க முத்து நடந்த விஷயத்தை சொல்லி மீனாவுக்காக தான் போனை எடுக்காமல் இருக்கிறேன் என்று கூறுகிறார்.
பிறகு ரவி ஸ்ருதியை பார்க்க வந்து நடந்த விஷயங்களை சொல்ல சாரி கேட்க இதில் என்ன இருக்கு அவங்க ரூமை அவங்க எடுத்துக்கிட்டாங்க எனக்கு இதுல எந்த ஒரு ஷாக்கும் கிடையாது. நாம வெளிய போயிட்டு வீட்டுக்கு போகலாம் என்று சொல்ல ரவி எந்த வீட்டுக்கு என கேள்வி கேட்க உங்க வீட்டுக்கு தான் என்று ஸ்ருதி சொல்ல ரவி ஷாக் ஆகிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
Straight Outta Sarpetta Video Song | Anbil Avan | Ashok Selvan | Preity | Govind…
Don’t Trouble The Trouble Title Song Lyrical (Tamil) | Fahadh Faasil, Ssara | Kaala Bhairava
Mozhiye Lyric Video | Baththa | Vijay Sethupathi | @SaiAbhyankkar | Sid Sriram | Balaji…
‘அன்பில் அவன்’ திரைப்படம் தனக்கு மிகவும் திருப்திகரமாக அமைந்துள்ளதாக நடிகை பிரீத்தி முகுந்தன் தெரிவித்துள்ளார். படத்திற்காக தான் மிகவும் கடினமாக…
2022-ம் ஆண்டு வெளியான ‘சர்தார்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகமாக ‘சர்தார் 2’ உருவானது. பி.எஸ். மித்ரன்…
கிரிஷ் ஏ.டி. இயக்கத்தில் நிவின் பாலி, மமிதா பைஜூ நடிப்பில் உருவான ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம், ஓணம் பண்டிகையை…