தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் முத்து ரவி மற்றும் மனோஜ் சொன்னதை நினைத்து மீனாவிடம் புலம்ப ஒரு கட்டத்தில் அதானே உண்மை என்று சொல்லி அதிர்ச்சி கொடுக்கிறார்.
இதனால் முத்து நீயும் அவங்கள மாதிரி சொல்றியா சொல்லு என வருத்தப்பட நான் நீங்கதான் காரணம்னு சொல்லல மாமா இன்னைக்கு நடந்தது எல்லாம் சொன்னாரு நீங்க குடிக்காம கொஞ்சம் அமைதியா இருந்திருக்கலாம் என்று கூறுகிறார். தேவையில்லாம அது ஏன் நெனச்சுட்டு இருக்காங்க படுத்து தூங்குங்க என்று சொல்லி மீனா கீழே வந்து விடுகிறார்.
அதைத் தொடர்ந்து விஜயா அண்ணாமலைக்கு பால் எடுத்து வந்து கொடுத்து இன்னைக்கு தான் நான் சந்தோஷமா இருக்கேன் என்று சொல்ல அண்ணாமலை இனிமேல் தானே உஷாரா இருக்கணும் மூன்று மருமகளையும் ஒரே மாதிரி நடத்தணும், என்று சொல்ல விஜயா நான் யாருக்காகவும் என்ன மாத்திக்க மாட்டேன் நான் எப்போதும் விஜயாவாக தான் இருப்பேன் யார் எந்த இடத்தில வைக்கணும்னு எனக்கு தெரியும் என்று கூறுகிறார். ஆனால் அண்ணாமலை தூங்கிய பிறகு அவர் சொன்ன விஷயங்களை நினைத்து நினைத்து விஜயா தூக்கம் வராமல் தவிக்கிறார்.
அடுத்து ரோகினி மனோஜ்க்கு பால் எடுத்து வந்து கொடுத்து ஸ்ருதியோட உதவி நமக்கு நிச்சயம் தேவை. அவளோட ஸ்டேட்டஸ் நிறைய இடத்துல நமக்கு உதவும் நீயும் ரவியோட நல்லா பேசி பழகு, முத்து எப்பவும் சண்டை போட்டுட்டு இருக்கு அதனால ரவி உன்கிட்ட ரொம்ப அட்டாச் ஆகிடுவாரு என்று சொல்ல மனோஜ் நீ சொல்றது சரிதான் என்று கூறுகிறார்.
அதைத் தொடர்ந்து ரவியும் ஸ்ருதியும் ரூமுக்குள் இருக்கும்போது ஸ்ருதி ஷாப்பிங் போயிட்டு வந்ததுனால கால் எல்லாம் வலிக்குது என்று சொல்ல ரவி காலை பிடித்து விட அண்ணாமலை பேசிய விஷயங்களைப் பற்றி சுருதி பேசுகிறார். உண்மையாகவே உங்க அப்பா ரொம்ப ஸ்வீட் இந்த வீட்ல உனக்கு அடுத்தபடியாக எனக்கு உங்க அப்பாவை தான் ரொம்ப பிடிச்சிருக்கு என சொல்கிறார்.
மேலும் முத்துவை ஒரு வில்லன் மாதிரியே பார்க்கிறார். மீனா பாப்பாவும் அவங்க வாழ்க்கையை சரி பண்ணனும் என்று சொல்ல ஷாக் ஆகும் ரவி நீ என்ன பண்ண போற என்று கேட்க நடக்கும் போது உனக்கே தெரியும் என ட்விஸ்ட் வைக்கிறார். பிறகு இப்படியே பேசிட்டு இருந்தா டெகரேஷன் எல்லாம் வேஸ்டா போயிடும் என்று ரவி ரொமான்ஸ் மூடுக்கு செல்கிறார்.
மறுபக்கம் மொட்டை மாடியில் முத்து தூக்கம் வராமல் அங்கும் இங்கும் எழுந்து நடந்து தவித்துக் கொண்டிருக்கிற கீழே மீனா நிம்மதியாக தூங்கிக் கொண்டிருக்கிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
இளநீர் பாயாசம் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…
சம்பளத்தை அஜித் உயர்த்தியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் ஜனவரி…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்கலை…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடு க்ரிஷ் பாட்டி…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…