siragadikka aasai serial episode update 14-02-24
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இது சீரியலின் இன்றைய எபிசோட்டில் மாமா அவன் என் பிரண்டு அவனை அடிக்காத என்று சட்டையை பிடிக்க என் மேலேயே கைய வைக்கிறியா என்று முத்து சத்யாவை போட்டு அடித்து கையைப் பிடித்து முறுக்கி விடுகிறார்.
பிறகு செல்வம் முத்துவை தடுத்து நிறுத்தி சத்யாவை நீ போடா என்று அனுப்பி வைக்கிறார். அதன் பிறகு சித்தியுடன் வந்த சத்தியா கைவலியில் துடிக்க சிட்டி ஹாஸ்பிடல் போயிடலாம் என்று கூப்பிட வேண்டாம் கொஞ்ச நேரத்துல சரியா போயிடும் நான் வீட்டுக்கு போறேன் என்று சொல்ல சிட்டி வீட்டில் வெளியே கொண்டு வந்து விடுகிறார்.
வீட்டுக்கு வந்ததும் வலியில் துடிக்க அம்மா என்னடா ஆச்சு என்று கேட்க பைக்கில் இருந்து கீழே விழுந்து விட்டதாக சொன்னதும் மீனாவின் அம்மாவும் சீதாவும் பதறி அடித்து ஹாஸ்பிடல் அழைத்துச் செல்கின்றனர். மறுபக்கம் முத்துவிடம் செல்வம் என்னதான் இருந்தாலும் நீ சத்யாவை அடிச்சிருக்க கூடாது அவன் உனக்கு இருக்க ஒரே மச்சான் இதனால என்ன பிரச்சனை நடக்கும்னு தெரியல என்று சொல்ல முத்து சத்யா செய்த விஷயத்தை வீடியோ ஆதாரமாக காட்டி கோபப்படுகிறார்.
அவ மேல அவங்க வீட்டுல பெரிய நம்பிக்கை வச்சிருக்காங்க இந்த விஷயத்தை சொல்லலாம்னு தான் அங்க போனேன். ஆனா அத்தை பேசுவதை கேட்டு சொல்ல முடியல. அவங்களோட மொத்த நம்பிக்கையும் சத்யாவா தான் இருக்கான். எங்க வீட்ல இந்த விஷயம் தெரிந்தால் எங்க அம்மா மீனாவை வீட்டிலேயே இருக்க விட மாட்டாங்க. இந்த விஷயம் யாருக்கும் தெரிய கூடாது அது தான் எல்லாருக்கும் நல்லது ஸ்டுடியோலயும் வீடியோவை டெலிட் பண்ண சொல்லிட்டேன் நானும் டெலிட் பண்ண போறேன் என்று போனை எடுக்க செல்வம் வேண்டாம் சத்யாவை திருத்த இந்த ஆதாரம் ரொம்ப முக்கியம் என்று கூறுகிறார்.
அடுத்ததாக மீனா முத்துவுக்கு போன் போட்டு சத்யாவுக்கு அடிபட்ட விஷயத்தை சொல்லி உடனே ஹாஸ்பிடல் கிளம்பி வர சொல்ல முத்து சவாரிக்கு போயிட்டு இருக்கேன் இப்போதைக்கு வர முடியாது நீயே பார்த்துக்கொள் என்று சாதாரணமாக பேச மீனா அதிர்ச்சி அடைகிறார். என் தம்பி வலியை துடிச்சிட்டு இருக்கான் அதைவிட உங்களுக்கு சவாரி முக்கியமா என்று கேட்க எனக்கு என் தம்பிக்கு அடிபட்டிருந்தாலும் சவாரி தான் முக்கியம் என்று சொல்ல மீனா கோபப்படுகிறார்.
சும்மா கடுப்பேத்தாத மீனா நீயே பக்கத்துல இருந்து பார்த்துக்க என்று சொல்லி முத்து போனை வைக்க மீனா அதிர்ச்சியில் கலங்கி நிற்கிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
Ranabaali Official Trailer (Tamil) | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan | Ajay-Atul
Aathi Iva Yarraa Lyric Video | SCENE | Suriya | Nazriya Nazim | Naslen |…
Terror Error Lyrical Video | Drones | Siddhi Idnani | Devadarshini | R Raghav Mirdath…
நடிகர் ரஜினிகாந்த் – இயக்குநர் நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜெயிலர் 2’. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், அனிருத்…
தமிழ் திரையுலகில் பல்வேறு திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருபவர் நடிகர் ஆர்யா. வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் இவர்,…
‘ஆர்டிஎக்ஸ்’ திரைப்படப் புகழ் நஹாஸ் ஹிதாயத் இயக்கத்தில், துல்கர் சல்மான் நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘ஐ ஆம் கேம்’.…