siragadikka aasai serial episode update 13-06-24
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ஸ்ருதி மற்றும் மீனா என இருவரும் மாறி மாறி பேசுவதை கேட்ட மனோஜ் ரெண்டு பேர்ல யாரோ ஒருத்தர் பொய் சொல்லணும் என்று சொல்கிறார்.
பிறகு மீனா ஸ்ருதி நான் உங்ககிட்ட சொல்லிட்டு தான் போனேன்.. நீங்க கூட சரி ஓகேன்னு சொன்னீங்க என்று நடந்த விஷயத்தை சொல்ல சுருதி அப்படியா என்று யோசித்து சிரிக்க முத்து இப்ப எதுக்கு பேய் மாதிரி சிரிக்கிற என்று கேட்க ஸ்ருதி நடந்த விஷயத்தை சொல்லி மிஸ் அண்டர்ஸ்டாண்டிங் ஆகி இருக்கு என்று சொல்கிறார். பிறகு மீனா விஜயாவை கூப்பிட்டு என் புருஷனுக்கு என் மேல பாசமே இல்லன்னு சொன்னிங்களே இப்போ அவர் பாசத்தை பத்தி தெரிஞ்சுக்கிட்டிங்களா என்று பதிலடி கொடுக்கிறார்.
பிறகு இருவரும் மொட்டை மாடியில் உட்கார்ந்து பேசும்போது மீனா முத்துவிடம் ரொம்ப பயந்துட்டீங்களா எங்கெல்லாம் போய் தேடுனீங்க என்று கேட்க நடந்த விஷயங்கள் அனைத்தையும் சொல்கிறார். மேலும் சத்யா போலீஸ் ஸ்டேஷனில் கம்ப்ளைன்ட் கொடுக்க வந்திருந்த விஷயத்தை சொல்கிறார். பிறகு மீனாவுக்கு மல்லிப்பூ வைத்துவிட்டு சாப்பாடு ஊட்டி விடுகிறார். மீனாவும் முத்துவுக்கு ஊட்டி விடுகிறார்.
இதை தொடர்ந்து மறுநாள் மீனா அம்மாவும் சீதாவும் மீனாவைப் பற்றி பேசிக் கொண்டிருக்க அப்போது மீனா வீட்டுக்கு வந்து நடந்த விஷயங்களை சொல்கிறார். அடுத்ததாக சத்யா வந்ததும் எதுக்குடா மாமா மேல போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுத்த என்று சொல்லித் திட்ட எல்லோரும் ஷாக் ஆகின்றனர். நீ என்னை எங்கெல்லாம் தேடின என்று கேட்க லேட் ஆகிடுச்சு நேரா ஸ்டேஷனுக்கு தான் போனேன் என்று சொல்ல அவர் நான் பூ கொடுக்கிற எல்லா இடத்துக்கும் போய் என்னை தேடி இருக்காரு, இதெல்லாம் நீயா பண்ண மாதிரி தெரியல.. யார் சொல்லி பண்ண என்று கேட்க சிட்டி தான் சொன்னான் என்று சொல்ல மீனா அவன் நல்லவன் இல்லன்னு ஒரு நாள் உனக்கே தெரிய வரும் என்று எச்சரித்து விட்டு கிளம்பி செல்கிறார்.
பிறகு சிட்டியை பார்க்க வந்த சத்தியா இனிமே மாமா விஷயத்துல தலையிட வேண்டாம். அவர் என்னுடைய விஷயத்துல தலையிடாம அமைதியா தான் இருக்காரு அப்படி இருக்கும்போது நாம தான் அவரை தேடி தேடி போய் பிரச்சனை பண்றோம் இனிமே அப்படி இருக்க வேண்டாம் தப்பு நம்ம மேல தான் என்று சொல்லி ஷாக் கொடுக்கிறார். இனிமே அவர் விஷயத்துல தலையிட வேண்டாம் என்று சொல்கிறார். இதனால் சிட்டி அதிர்ச்சியாவதோடு இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
கம்ருதீன் மற்றும் ஆதிரை இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்…
இட்லி கடை படத்தின் 9 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…
கோலாகலமாக சீதாவின் கடை திறப்பு விழா நடந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க…
கனி மற்றும் பிரவீன் இருவரும் வேண்டுமென்றே சாப்பாட்டில் அதிகமாக உப்பு சேர்த்துள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
தேங்காய் பாலில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…