முத்து போட்ட பிளான், விஜயாவை திட்டிய அண்ணாமலை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் குடித்துவிட்டு போதையில் கலாட்டா செய்த மனோஜை ரோகிணி ஒரு அடி கொடுத்து ரூமுக்குள் அழைத்துச் செல்கிறார்.

அதைத்தொடர்ந்து சுருதி ரவியை அழைத்துச் செல்ல மீனா நீங்க எவ்வளவு குடிச்சீங்க என்று முத்துவிடம் கேட்க முத்து நான் குடிக்கல என்று சொல்ல அதை நம்ப மறுக்கும் என பொய் சொல்லாதீங்க எவ்வளவு பிரச்சனை உண்மையை சொல்லுங்க ஊதி காட்டுங்க என்று சொல்ல முத்து மீனாவை பிடித்து இழுத்து ஊதி காட்ட ஆமா வாசனையே வரல அப்ப நீங்க குடிக்கலையா ஏன் குடிக்கல என்று கேட்கிறார். குடிக்காமலேயே அவ்வளவு பெரிய பிரச்சினையாச்சு அதனால குடிக்க தோணல என்று சொல்ல அப்போ இனிமே குடிக்க மாட்டீங்களா என்று மீனா கேட்க அப்படியெல்லாம் சொல்ல முடியாது இன்னைக்கு தோணல நாளைக்கு தோன்றலாம் என்று முத்து சொல்கிறார்.

அதன் பிறகு முத்து சவாரி ஒன்றை இறக்கி விட அவர் பணம் எடுத்துட்டு வந்தேன் எடுத்துட்டு வரல இருப்பார் கடைக்குள்ள போயிட்டு வரேன் என்று சொல்ல முத்து ஏதாச்சும் வாங்க போறீங்களா என்று கேட்க இல்லப்பா இது என்னுடைய கடை தான் என்று சொல்லி உள்ளே போக ரவுடிகள் குறைந்த பணத்திற்கு கடையை கொடுக்குமாறு மிரட்டுகின்றனர். இதைப் பார்த்து முத்து ரவுடிகளிடம் சண்டை போட்டு அவர்களை அடித்து ஓட விடுகிறார்.

அதன் பிறகு பணத்தை கொடுக்க கடைக்காரர் இந்த கடையை வித்துட்டு வெளிநாட்டுக்கு போய் பிள்ளைகளோட பேர பசங்களோட இருக்க போறதா சொல்கிறார். இதை கேட்டது முத்துவுக்கு மனோஜ் ஞாபகம் வர அது குறித்து கடைக்காரரிடம் பேச உனக்காக வேணும்னா பழைய கம்மி பண்ணிக் கொள்ளலாம் என்று சொல்கிறார்.

மறுபக்கம் வீட்டில் விஜயா மனோஜ் மனோஜ் என்று கூப்பிட மனோஜ் எதுக்குமா கத்துற என்று சொல்கிறார். ஒரே தலைவலியா இருக்கு என்று சொல்ல அண்ணாமலை ஏன் என்னாச்சு என்று கேட்க மொட்டை மாடியில என்ன பிசினஸ் பண்றதுன்னு யோசிச்சிட்டு இருந்தேன் அதனால தலைவலி என்று சொல்கிறார். சுருதி இவனும் தலை வலிக்குதுன்னு தான் சொல்லிக்கிட்டு இருக்கா என்று கேட்க உனக்கு என்னடா ஆச்சு என்று கேட்க நானும் தான் அவ கூட சேர்ந்து யோசிச்சிட்டு இருந்தேன் என்று சொல்கிறார் ரவி.

இந்த நேரத்தில் முத்து வீட்டுக்கு வர உனக்கும் தலைவலியா என்று அண்ணாமலை கேட்க ஏம்பா என்று முத்து கேட்க இவங்க ரெண்டு பேரும் தலைவலி என்று சொல்லிட்டு இருக்காங்க என்று சொன்னது நைட்டே சொன்னேன் தண்ணிய குடி என்று முத்து உண்மையை உளற போக மனோஜ் மற்றும் ரவி தடுத்து நிறுத்தி விடுகின்றனர்.

அதன் பிறகு முத்து அண்ணாமலையிடம் கடை குறித்த விஷயத்தை சொல்ல விஜய்யா மளிகை கடையை வாங்க சொல்றான் பாருங்க என்று நக்கலாக சொல்ல ஏன் மளிகை கடையை வாங்க கூடாதா அது மூலமாகவும் பெரிய ஆளானவங்க நிறைய பேர் இருக்காங்க ஆனா நான் சொல்ல வந்தது அந்த கடை கிடையாது என்று கடையைப் பற்றி விளக்க ரவி ஹோம் அப்ளையன்ஸா என்று கேட்கிறார்.

முத்து ஆமாம் என்று சொன்னதும் இதுவும் நல்ல ஐடியா தான் என ரவி சொன்னதும் ஸ்ருதி இது சம்மர் டைம் வேற நல்ல சேல் இருக்கும் எனவும் சொல்கிறார். விஜயா அவன் சொல்றதெல்லாம் சரிப்பட்டு வராது என்று பதில் கொடுக்க அண்ணாமலை அவன் எது சொன்னாலும் சரியா இருக்காதுன்னு சொல்லிடுவியா? எனக்கு என்னவோ மனோஜ்க்கு இது ஏத்த மாதிரி இருக்கணும்னு தான் தோணுது என்று சொல்ல மனோஜ் உக்காந்த இடத்தில் இருந்தே சம்பாதிக்கலாம் என்பதால் எனக்கு ஓகே மாதிரி தான் தெரியுது என்று ரோகிணியிடம் சொல்கிறார்.

ரோகிணி முதலில் கடையை பார்க்கலாம் அதுக்கப்புறம் முடிவு பண்ணிக்கலாம் என்று சொல்ல மீனா முத்துவை இழுத்துச் சென்று உங்களுக்கு எதுக்கு இந்த தேவையில்லாத வேலை? நீங்க எது பண்ணாலும் அது வில்லங்கமா தான் இருக்கும்னு சொல்றாங்க தேவையா இதெல்லாம் என்று திட்டுகிறார்.

முத்து என்னதான் இருந்தாலும் அவ என்னுடைய அண்ணன் அது ஒரு பக்கம் இருந்தாலும் அவ இந்த பணத்தையும் கொண்டு போய் எங்கேயாவது ஏமாந்துட்டா அப்பாவுக்கு கிடைக்க வேண்டிய 27 லட்சம் கிடைக்காமலேயே போயிடும். அவனுக்கு ஒரு நல்ல கடையா பார்த்து உட்கார வைத்துட்டா இந்த 27 லட்சத்தை ஈஸியா வாங்கிடலாம் என்று தன்னுடைய திட்டத்தை சொல்கிறார்.

அடுத்ததாக எல்லோரும் கடைக்கு வர கடை பார்த்ததும் விஜயா ரோகினி மனோஜ் என எல்லோரும் வாயை பிளக்கின்றனர். முத்து கடை ஓனருக்கு தன்னுடைய குடும்பத்தை அறிமுகம் செய்து வைக்கிறார். அதன் பிறகு சுற்றிப் பார்க்கும் மனோஜ் ஓனர் சாரில் உட்கார்ந்து சந்தோஷப்பட அதை பார்த்து ரோகினியும் விஜயாவும் சந்தோஷப்படுகின்றனர்.

அடுத்ததாக ஓனர் என்னப்பா எல்லாம் ஓகே வா என்று கேட்க மனோஜ் ஓகே தான் என்று சொன்னதும் முத்து அப்ப பேசிடலாமா சார் என்று கேட்க ரோகிணி அதனால் நாங்கள் பேசிக் கொள்கிறோம் என்று முத்துவை தடுத்து நிறுத்துகிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

jothika lakshu

Recent Posts

Meesaya Murukku 2 Official Trailer

Meesaya Murukku 2 Official Trailer | Hiphop Tamizha | Khushbu Sundar | ACS Arun Kumar

8 hours ago

Vaan Meeru Video Song

Vaan Meeru Video Song | Enna Vilai | Karunaas | Nimisha | Sam CS |…

9 hours ago

Maayapoove Lyrical Video Tamil

Maayapoove Lyrical Video Tamil | Bethlehem Kudumba Unit | Vishnu Vijay | Girish AD |…

9 hours ago

Neengalellam Lyrical Video

Neengalellam Lyrical Video | Aagayam | N.R. Raghunanthan | Jayamoorthy | Thinanthorum Nagaraj

10 hours ago

DHIK.DHIK..DHIK… Official Teaser

DHIK.DHIK..DHIK... Official Teaser | Pavel | JSK | Chandini | Sandra | Bijesh | Srinivasan

10 hours ago

Asku Macha Lyrical Video

Asku Macha Lyrical Video | Drones | Siddhi Idnani | Anjali Nair | Dravid Selvam…

1 day ago