Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

முத்துக்கு வார்னிங் கொடுத்த தலைவர், சிட்டி எடுத்த முடிவு, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

siragadikka aasai serial episode update 13-03-24

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா இவங்க ரெண்டும் இப்பதான் சண்டை போட்டுச்சுங்க அதுக்குள்ள ஒன்னா சேர்ந்துடுச்சுங்க என்று சொல்ல பார்வதியின் கண்கலங்கி இருப்பதை பார்த்து விஜயா என்னாச்சு என கேட்கிறார்.

உன் பையனும் மருமகளும் இவ்வளவு அன்னோன்யமா இருக்காங்க பாக்கவே சந்தோசமா இருக்கு என் புருஷனும் எனக்கு இப்படித்தான் ஊட்டி விடுவாரு, எனக்கு அவருடைய ஞாபகம் வந்துடுச்சு அவர் இருக்கும்போது சரியா பாத்துக்கல ஆனா உனக்கு எல்லாரும் இருக்காங்க நீ எல்லாம் மருமகளையும் ஒரே மாதிரி நடக்கணும் இந்த குடும்பமே ரொம்ப சந்தோஷமா இருக்கும் என்று சொல்ல இன்னொரு குல்பி வேணும்னா போய் வாங்கி சாப்பிடு, இப்படி ஜால்ரா அடிச்சுட்டு இருக்காத என்று விஜயா கோபப்படுகிறார்.

பிறகு எல்லோரும் தூங்கிவிட மீனா மட்டும் தனியாக மாலை கட்ட தூக்கத்திலிருந்து எழுந்திருக்கும் முத்து இன்னும் கட்டி முடியலையா என்று கேட்க இன்னும் கொஞ்சம் தான் இருக்கு என்று சொன்னதும் மீனாவுக்காக டீ போட்டுக் கொண்டு வந்து கொடுக்கிறார். எப்படி இருக்கு என்று கேட்க மீனாவும் நல்லா இருக்கு என்று சொல்ல நான் போட்டதாச்சே என்று சொல்லும் முத்து கொஞ்ச நேரம் கழித்து அதுல நான் சர்க்கரையை போடவில்லையே எனக்கே இப்பதான் ஞாபகம் வருது என்று சொல்ல நீங்க காட்டுற அக்கறை இனிப்பா இருக்கு என மீனா டயலாக் அடிக்க முத்து கலாய்க்கிறார்.

பிறகு மறுநாள் காலையில் மாலையெல்லாம் கட்டி முடித்து வண்டியை வரச்சொல்லி எல்லாவற்றையும் ஏற்ற டிரைவர் காதலியுடன் தொடர்ந்து போனில் பேசிக் கொண்டே இருக்க முத்து வண்டியை எங்கும் நிறுத்தாத, சீக்கிரமா போய் மண்டபத்துல நாளைய சேர்த்திடு என்று சொல்ல எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன் என்று டிரைவர் கிளம்பிச் செல்ல சிட்டியின் ஆட்கள் பின் தொடர்ந்து செல்கின்றனர்.

ஒரு இடத்தில் வண்டியின் பின் டயர் பஞ்சரா இருக்கு என்று சொல்லி டிரைவரின் கவனத்தை திசை திரும்புகின்றனர். டிரைவர் கீழே இறங்கிய சமயம் பார்த்து வண்டியை தூக்கி விடுகின்றனர். பிறகு சிட்டிக்கு தகவல் கொடுக்க சூப்பர் ரா. எப்படியும் முத்துவுக்கு உண்மை தெரிஞ்சிருக்கும், அவள் கண்டிப்பா உங்கள தேடி வருவான் அதுக்குள்ள ஊர் எல்லையை விட்டு வெளியே போய் குப்பையில் கொட்டி எரிச்சிடுங்க என்று சொல்கிறார்.

மறுபக்கம் தலைவர் எல்லா ஏற்பாடும் நேரடியா என்று கேட்க மாலை மட்டும் இன்னும் வரலை என்று சொல்ல முத்துவின் நண்பனை கூப்பிட்டு நம்ப மாலையும் வரல என்று சொன்னால் நேரத்துக்கு வந்திருக்கணுமே, நான் டிரைவர் கிட்ட என்னன்னு கேட்கிறேன் என்று சொல்கிறார்.

டிரைவரே பத்து முறை போன் பண்ணி இருப்பதை பார்த்து போன் பண்ணி என்ன விஷயம் என்று விசாரிக்க மாலையோட வண்டியை தூக்கிட்டாங்க என்று சொல்ல முத்து மீனா அதிர்ச்சி அடைகின்றனர். பிறகு இருவரும் சேர்ந்து டிரைவர் இருக்கும் இடத்திற்கு வந்து வேனை தேடி அலைகின்றனர்.

மறுபக்கம் தலைவர் முத்துவுக்கு போன் போட்டு இன்னும் கொஞ்ச நேரத்துல மாலையெல்லாம் இங்க வரணும் என வார்னிங் கொடுக்கிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

siragadikka aasai serial episode update 13-03-24
siragadikka aasai serial episode update 13-03-24