தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் முத்து, மீனா மனோஜ் என மூவரும் குமரி பாளையம் வந்து ரோகிணி குறித்து விசாரிக்கின்றனர். போட்டோவை காட்டி ஒவ்வொருத்தரிடம் கேட்க எல்லோரும் யாரென்று தெரியவில்லை என்று சொல்லி விடுகின்றனர்.
காரை எடுத்துக்கொண்டு ரோடு ரோடாக திரிய முத்து மனோஜை திட்டி கொண்டே வருகிறார். மறுபக்கம் அம்மா வீட்டுக்கு வந்த ரோகினி மனோஜூம் என்னை ஏமாற்றிட்டான் என அம்மாவை கட்டிப்பிடித்து அழுகிறார். மனோஜ் தன்னிடம் பொய் சொன்ன விஷயத்தை சொல்ல அவரது அம்மா மாப்பிள உனக்கு விஷயம் தெரிந்தால் கஷ்டப்படுவேன்னு சொல்லாம இருந்திருக்கலாம் என்று பேச நீயும் அவனுக்கு சப்போர்ட் பண்ணி பேசாத என கூறுகிறார்.
இந்த சின்ன விஷயத்துக்கு எதுக்கு கோச்சிக்கிட்டு வந்த என கேள்வி கேட்க இது சின்ன விஷயமா என ரோகினி கேட்க அவரது அம்மா மனோஜ்க்கு ஆதரவாக பேசுகிறார். உடனே ரோகினி நீயும் தான் பொய் சொல்லி இருக்க அப்படின்னு குத்தி காட்டுறியா என்று கேள்வி கேட்க நான் அப்படி சொல்லல உன் மனசாட்சியே உன்னை கொல்லுது என கூறுகிறார். இந்த நேரம் பார்த்து கிரிஷ் ஓடிவந்து அத்தை எப்ப வந்த எப்படி இருக்க நான் செகண்ட் ரேங்க் வந்து இருக்கேன். ஏன உன் கண்ணு சிவந்திருக்கு, தூசி விழுந்துடுச்சா என ஊதி விட ரோகினி அவனை கட்டிப்பிடித்து அழுகிறார்.
இங்கே வீட்டுக்கு வரும் பார்வதி விஜயாவிடம் இப்படி பணக்காரன் மருமகளை தொலைச்சிட்டு நிற்கிற? அவ எங்க போனா ஏதாவது தெரிந்ததா இந்த காலத்து பொண்ணுங்க ஏதாச்சு ஒன்னுனா இந்த வாழ்க்கையே வேணாம்னு கோர்ட்டுக்கு போயிடறாங்க அப்படி இல்லன்னா வாழ்க்கையே முடிச்சுக்கிறாங்க. மனோஜை ரயில்வே டிராக், மார்ச்சரிக்கலாம் தேடிப் பார்க்க சொல்லு என்று சொல்ல விஜயா உச்சகட்ட பயத்திற்கு செல்கிறார். ஏதாவது தகவல் தெரிஞ்சா சொல்லு என பார்வதி கிளம்பி சென்று விடுகிறார்.
இங்கே முத்து மனோஜை திட்டிக் கொண்டே வர கௌதமி போதும் நான் நடந்தே போய் தேடுகிறேன் என்று மனோஜ் கோபப்பட முத்து காரை நிறுத்தி விடுகிறார். மனோஜ் இறங்கி போக இப்படியே இங்கேயே திரிஞ்சிக்கிட்டு இருக்க வேண்டியது தான் திருப்பி வீட்டுக்கு வர உன் பாக்கெட்ல பத்து பைசா கிடையாது என திட்டுகிறார். இந்த நேரம் பார்த்து விளையாட வந்த கிரிஷ் பால் கார் மீது வந்து விழ மீனா கிரிஷ்ஷை பார்த்து விடுகிறார்.
முத்து நீங்க என்னடா பண்ற என்று கேட்க இது எங்க ஊரு நீங்க என்ன பண்றீங்க என கேள்வி கேட்க மீனா உங்க வீட்டுக்கு எங்களை கூட்டிட்டு போறியா என்று சொல்ல கிரிஷ் வாங்க கூட்டிட்டு போறேன் என சொல்கிறான். அதன் பிறகு கிரிஷ்ஷை கூட்டிக்கொண்டு முத்து மீனா மனோஜ் ஆகியோர் வீட்டிற்கு வருகின்றனர்.
இங்கே ரோகினி அம்மாவிடம் திரும்பவும் அந்த வீட்டுக்கு போக போறது இல்ல, தினம் தினம் அவங்க சமாளிக்க முடியல என் மாமியார் வேற உங்க அப்பா எப்ப வருவார் என்று கேட்டுக்கொண்டே இருக்காங்க என்று சொல்லி நான் கொஞ்சம் நேரம் தூங்குறேன் என்று படுக்க தெருவில் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டு ரோகிணி எட்டிப் பார்க்க மனோஜ் முத்து மீனா வந்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து பின்பக்கமாக ஓடி ஒளிகிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
