Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

முத்துவால் சந்தோஷத்தில் மீனா. ரோகினிக்கு காத்திருந்த ஷாக். இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

siragadikka aasai serial episode update 07-02-24

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் முத்து மீனாவை கூப்பிட்டு எடுத்து வந்திருந்த தாலியை கொடுக்க அதை பார்த்து மீனா சந்தோஷப்படுகிறார்.

நான் சொன்ன மாதிரியே அவர் எனக்கு தாலி எடுத்துக் கொடுத்துட்டாரு என்று சொல்ல விஜயா பெரிய தாலி, என்னமோ தாலி செயின் வாங்கிட்டு வந்து கொடுத்த மாதிரி பேசுற என்று சொல்ல அதையும் அவர் வாங்கி கொடுப்பாரு என்று கூறுகிறார் மீனா. அண்ணாமலையும் அவன் பொண்டாட்டி போட்ட சபதத்தை அவன் நிறைவேற்றி இருக்கான், மத்ததையும் அவன் செய்வான் என்று கூறுகிறார்.

பிறகு மீனாவை தாலியை போட்டுக்க சொல்ல இப்ப போட்டுக்க மாட்டேன் என்று கூறுகிறார். முத்து ஏன் போட்டுக்க மாட்ட? அதற்கு தானே வாங்கிட்டு வந்தேன் என்று சொல்ல அதற்கு ஒரு பிளான் வச்சிருக்கேன் என்று சொல்ல நாள் கிழமை எல்லாம் பார்த்து தான் போட்டுக்குவியா என்று விஜயா கேள்வி கேட்கிறார்.

முத்து என்ன பிளான் என்று கேட்க வாங்க சொல்றேன் என்று ரூமுக்கு சென்று விட முத்து பின்னாடியே சென்று என்னவென்று கேட்க ஒரு இடத்துக்கு போக போறோம் அப்போ உங்களுக்கே புரியும் என்று சொல்கிறார்.

அடுத்ததாக விஜயா ரோகினி ரூமுக்குள் வந்த விஜயா இந்த மீனா ரொம்ப பண்றா, அதுக்குள்ள நகையை எடுக்க முத்துவுக்கு எப்படி பணம் கிடைத்தது என்று கேட்க எனக்கும் அதான் ஆன்ட்டி டவுட்டா இருக்கு டிரைவராக எப்படி அவ்வளவு சம்பாதிக்க முடியும் என சொல்கிறார் ரோகினி. மீனா கடைய போட்டதும் நல்லா சம்பாதிக்கிறாள், அவ தான் பணத்தை கொடுத்து வாங்கி இருக்க சொல்லணும் ஒண்ணுமே தெரியாத மாதிரி நடிக்கிறா என்று சொல்ல இருக்கும் ஆன்ட்டி என்று ரோகினியும் கூறுகிறார்.

நீயும் இந்த மாதிரி நகை வாங்கி போட்டுக்க என்று சொல்ல அதான் தாலி பிரிச்சு கோர்க்கும் போது வாங்க போறோமே என்று கூறுகிறார். அது அப்போ வாங்கிக்கலாம் இப்போ அந்த மீனாவுக்கு நான் ஒன்னும் குறைந்தவ இல்லனு நீ காட்ட வேண்டாமா உங்க அப்பா கிட்ட சொன்னா கிலோ கணக்குல வாங்கி தர போறாரு பேசி நகை வாங்கி போட்டுக்க என்று சொல்கிறார்.

மேலும் நீ போனை போட்டு கொடு நான் உங்க அப்பாகிட்ட பேசுறேன் என்று சொல்ல ரோகிணி வேண்டாம் ஆன்ட்டி நானே பேசுகிறேன். நீங்க பேசினா நகைக்காக பேசின மாதிரி ஆயிடும் அது தப்பா இருக்கும் என்று கூறுகிறார். பிறகு விஜயா சரி மறக்காம பேசிடு என்று சொல்லி வெளியே செல்கிறார்.

பார்லருக்கு வந்த ரோகினி வித்யாவை கூப்பிட்டு வீட்டில் நடக்கும் பிரச்சனையை சொல்லி இப்ப நான் என்ன பண்றது என்று தவிக்கிறார். இந்த நேரம் பார்த்து ஒரு பெண் வந்து உங்களை பார்க்க உங்க மாமா வந்து இருக்காரு என்று சொல்ல வெளியே வந்து பார்க்க வசீகரன் நிற்கிறார். அவர் ஒரு பக்கம் பணத்தைக் கேட்டு இரண்டு நாள் டைம் கொடுத்து விட்டு கிளம்பி செல்கிறார்.

பிறகு மீனா சப்ரைசாக முத்துவை அவரது அம்மா கடை போட்டு இருக்கும் கோவிலுக்கு அழைத்து வருகிறார். கோவில்ல தாலியை வச்சு பூஜை பண்ணி போட்டுக்க போறியா என்று முத்து கேட்க இல்ல நீங்க போயிட்டு இந்த டிரஸ் மாத்திட்டு வாங்க என்று ஏற்கனவே வாங்கி வைத்திருந்த புது டிரெஸ்ஸை எடுத்துக் கொடுக்கிறார். ‌

முத்துவும் ட்ரஸ் மாத்தி வர மீனா ஐயரிடம் கடை வைத்துக் கொடுத்த விஷயத்தை பற்றி சொல்ல முத்து வந்ததும் ஐயர் மீனாவுக்கு நல்ல புருஷன் கிடைச்சிருக்காங்க என்று முத்துவை பாராட்டி பேசுகிறார். ‌ மேலும் மீனா ராசியான பொண்ணு தொட்டதெல்லாம் துலங்கும் என்று கூறுகிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

siragadikka aasai serial episode update 07-02-24
siragadikka aasai serial episode update 07-02-24