முத்துவால் அதிர்ச்சியான விஜயா.. மீனா எடுத்த முடிவு.. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, விஜயா மீனாவை திட்டி விட்டு மேலே வர அண்ணாமலை விஜயாவிடம் அந்த பொண்ணு கிட்ட வாங்கின நகையை கொடுத்துடு என்று சொல்ல நானா வாங்கினேன் அவ தானே கழட்டி கொடுத்தா என்று விஜய் கூறுகிறார். நீ என்ன தான் அந்த பொண்ணு திட்டினாலும் அவ உனக்கு கொடுக்க வேண்டிய மரியாதை கொடுத்துக்கிட்டு தான் இருக்கா என்று சொல்ல மீனா நடிக்கிறா, பூ கட்டுற மாதிரி வார்த்தையை கோர்த்து கட்டுறா நீங்க இருக்கிறதை பார்த்துட்டு தான் அப்படி பேசி இருப்பார் என்று பேசுகிறார்.

ரோகினி ஸ்ருதியும் எவ்வளவு பெரிய இடத்தில் இருந்து வந்திருக்காங்க அவங்க எனக்கு எவ்வளவு மரியாதை தராங்க ஆனா இந்த மீனா அப்படி கிடையாது என்று பேசுகிறார் மேலும் கடையை பற்றியும் பேச மீனா வந்துவிட பேச்சை அடக்கிக் கொள்கிறார்.

அண்ணாமலை மீனாவிடம் நகை வாங்கி போட்டுக்கலாமா என்று சொல்ல எனக்கு வேண்டாம் மாமா, யாருடைய நகையும் எனக்கு தேவையில்லை என் வீட்டுக்காரர் வாங்கி தருவாரு என்று கூறுகிறார். தாலி செயினையாவது வாங்கி போட்டுக்கோ என்று சொல்ல என் புருஷன் காசுல வாங்குன தாலி தான் என் கழுத்துல ஏறணும், அவர் நினைச்சா இன்னைக்கு கூட வாங்கி தருவாரு என்று சொல்ல விஜயா வாயில தான் வாங்கி தருவான்.

அவனே டிரைவர் அவ எங்க இருந்து நகையை வாங்கி தரப்போறான்? கனவு தான் காண வேண்டும், அப்படியே வாங்கி கொடுத்தாலும் அறுபதாம் கல்யாணத்துக்கு தான் வாங்கி தருவான் என்று முத்துவை தரக்குறைவாக பேசுகிறார். அவர் நெனச்சா இன்னைக்கு கூட வாங்கித் தருவாரு எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு என்று விஜயாவுக்கு பதிலடி கொடுக்கிறார் மீனா.

பிறகு அண்ணாமலை உனக்கு தான் உன் புள்ள மேல நம்பிக்கை இல்லை ஆனால் அவ புருஷன் மேல நம்பிக்கை வைத்திருக்கிறார் எனக்கும் முத்து மேல நம்பிக்கை இருக்கு, முத்து கேட்டுக்க சீக்கிரம் வாங்கி கொடுத்துடு என்று சொல்கிறார். முத்து கண்டிப்பா வாங்கி தரேன் என்று சொல்லிவிட்டு சாப்பாடு ரெடியா என்று கேட்க விஜயா இதுக்கு மேல தான் செய்யணும் அவதான் காலையிலேயே போய் பூ கடையில் நின்னுடுறாளே என்று திட்ட மீனா நீங்க வாங்க இடியாப்பம் குருமா தேங்காய்ப்பால் எல்லாமே ரெடியா இருக்கு சாப்பிடுங்க, மாமா நீங்களும் வாங்க என்று சொல்லி மீனா கிச்சனுக்கு செல்ல அண்ணாமலை கிச்சனுக்கு போய் பாக்காமலேயே பேசற என விஜயாவை திட்டுகிறார்.

இங்கே மனோஜ் ஹோட்டலில் கஷ்டமாரிடம் என்ன சாப்பிடுறீங்க என்று கேட்க அவங்க என்ன இருக்கு என்று கேட்க இவர் லிஸ்ட் சொல்லிக் கொண்டே போக இந்த ஹோட்டலில் என்னப்பா ஸ்பெஷல் என்று கேட்டதும் ரவா கிச்சடி என்று சொல்ல அதையே கொண்டு வா என்று அனுப்புகின்றனர். ஆனால் ரவா கிச்சடி தீர்ந்து போயிடுச்சு என்று ஹோட்டலில் சொல்ல மனோஜ் அதை நீங்களே அவங்க கிட்ட சொல்லிடுங்க என்று சொல்லி விடுகிறார்.

பிறகு ரவா கிச்சடி இல்லை என்று சப்ளையர் வந்து சொல்ல கஸ்டமர் கோவப்பட்டு இதை கூட சரியா பார்த்து சொல்ல மாட்டியா? தண்டசோறு இவனையெல்லாம் எதுக்கு வேலைக்கு எடுக்குறீங்க என்று திட்டுகிறார்.

அடுத்ததாக முத்து செட்டுக்கு போக அங்கு சீட்டு ஏலம் விட காத்திருக்க முத்து யாருக்காவது தேவை இருக்கா என்று கேட்க அப்போ உனக்கு தேவை இருக்கு தானே நீ எடுத்துக்க என்று செல்வம் சொல்லி விட 40 ஆயிரம் ரூபாய் பணத்தை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்து எல்லோரையும் கூப்பிட்டு மீனாவுக்காக தாலி வாங்கி வந்ததை அண்ணாமலையிடம் கொடுக்க விஜயா அதிர்ச்சி அடைகிறார். முத்து என்னோட காசுல என் பொண்டாட்டிக்கு நான் வாங்குன தாலி என்று சொல்லி வித்யாவுக்கு பதிலடி கொடுக்கிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

siragadikka aasai serial episode update 06-02-24
jothika lakshu

Recent Posts

‘மண்டாடி’ பார்த்து சூரியை பாராட்டிய ரஜினிகாந்த்!

இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள ‘மண்டாடி’ திரைப்படம் செப்டம்பர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி,…

7 hours ago

திஷா சலியன் மரண வழக்கு: சிபிஐ FIR பதிவு!

மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் முன்னாள் மேலாளர் திஷா சலியன் மரண வழக்கில், மத்திய குற்றப்புலனாய்வுத் துறை…

7 hours ago

மலையாளத்தில் புதிய வசூல் சாதனை படைத்த ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’

நிவின் பாலி, மமிதா பைஜூ நடிப்பில் வெளியான ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம் மலையாள திரையுலகில் அதிக வசூல் செய்த…

8 hours ago

‘சியான் 63’ படத்தின் தலைப்பு வெளியீடு

‘இருமுகன்’ படத்தின் வெற்றிக் கூட்டணியான நடிகர் விக்ரம் மற்றும் இயக்குநர் ஆனந்த் சங்கர் மீண்டும் இணைந்துள்ள புதிய திரைப்படத்திற்கு ‘பவர்ஹவுஸ்’…

8 hours ago

சூர்யாவின் ‘சீன்’ படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘சீன்’ திரைப்படத்தின் சிறப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. சூர்யாவின்…

8 hours ago

Mookuthi Amman 2 Maha Sakthi Teaser

Mookuthi Amman 2 Maha Sakthi Teaser (Tamil) | Nayanthara | Sundar C | Hiphop Tamizha…

1 day ago