தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் நேற்றைய எபிசோட்டில் ராஜேஸ்வரி இருவரும் வாக்குவாதம் செய்து கொண்டிருக்க உள்ளே வரும் விஜயா என்னடா இவ்வளவு கோபமாக பேசிட்டு இருக்க என்று திட்டுகிறார். ஸ்ருதி உங்க பையன் எனக்கு பணம் கொடுத்து இன்ஸல் பண்ணி இருக்காரு என்று சொல்ல அது எனக்கும் புரிந்தது மா அவன பத்தி நீ பெருசா எடுத்துக்காத என்று சொல்கிறார்.
வீட்ல ரெண்டு பெரிய இடத்து மருமகள் இருக்காங்க இப்படி வாசலிலேயே பூக்கடை வச்சுட்டு இருந்தா நாளைக்கு மலேசியாவில் இருந்து ரோகினி ஓட அப்பா வந்தாலோ இல்ல ஸ்ருதியோட அம்மா வந்தாலோ என்ன நினைப்பாங்க நம்ம குடும்பம் மானத்தை வாங்குறதுக்குனே இப்படி பண்றாங்க, இதுக்கு ஒரு முடிவு கட்டுறேன் என சொல்லி வெளியே செல்கிறார்.
மீனா கடையை சந்தோஷத்துடன் பார்த்துக் கொண்டிருக்க சீதா என்னக்கா அப்படி பார்த்துட்டு இருக்க என்று கேட்க இதெல்லாம் நடக்கும்னு நான் நினைச்சு கூட பாக்கல எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு என்று சொல்ல அந்த பொண்ணு உனக்கு பணம் கொடுத்தாலுமே என்று மீனாவின் அம்மா கேட்க நான் கூட இந்த விஷயத்தை அவர்கிட்ட சொன்னதும் சண்டை போடுவார் என்று தான் நினைச்சேன் ஆனா இப்படி பண்ணுவார் என்று எதிர்பார்க்கல என சொல்கிறார்.
அதை தொடர்ந்து மீனாவுடன் பூ கட்டுபவர்கள் முதல்ல முத்துவிற்கு சுத்தி போடு உனக்கு கிடைச்ச புருஷன் யாருக்கும் கிடைக்க மாட்டாங்க என்று சொல்ல மீனா முத்து சந்தோஷப்படுகின்றனர். அதனைத் தொடர்ந்து முத்துமீனா கணக்கு பார்த்துக் கொண்டிருக்கும் போது 150 ரூபாய் குறையுது என்று மீனா சொல்லிக் கொண்டிருக்க முத்து இல்லையே சரியா தான் இருக்கு என கூறுகிறார்.
கடைசியாக வண்டிக்காரர் 150 ரூபாய் தரணும் என்று அதை எழுதி வைக்க மாட்டீங்களா என்று மீனா கணக்கை எழுதுகிறார். பிறகு வரவு செலவு எல்லாம் போக லாபம் 600 ரூபாய் என்று சொல்ல முத்து சந்தோஷப்படுகிறார். முதல் நாளே இவ்வளவு லாபம் வந்திருக்கு என மகிழ்ச்சி அடைய அந்த நேரம் பார்த்து வெளியா வெளியே வர முத்து வெறுப்பேற்றுவது பல முதல் நாளே 600 ரூபாய் லாபம் என சத்தமாக சொல்கிறார்.
அண்ணாமலையும் வந்துவிட அவரிடம் விசயத்தை சொல்லி சந்தோஷப்படுகின்றனர். மீனா ஏங்க இந்த 600 ரூபாய் வச்சி என்ன பண்ணலாம் என்று கேட்க விஜயா ஒரு தாஜ்மஹாலை கட்டி வாடகைக்கு விடுங்க என்று மக்கள் அடிக்கிறார். ஒரு 600 ரூபாய் வந்தது 6 ஆயிரம் கோடி வந்த மாதிரி பேசிக்கிட்டு இருக்காங்க என்ன கடுப்பாக அண்ணாமலை சின்னத் தொழில் தான் பெரிய தொழிலா மாறும் என பதிலடி கொடுக்கிறார்.
பிறகு முத்து இத பணத்தை அப்படியே வச்சுக்கோ இதே மாதிரி இன்னும் ரெண்டு மூணு கடையை திறந்து ஆளுங்கள வேலைக்கு வைத்து கல்யாண மாலை இது அதுன்னு பெருசா கடை நடத்தலாம் என்று கூறுகிறார். நாளைக்கு காலையில 3:30 மணிக்கு எழுந்து அம்மாவ கூட்டிட்டு போய் பூ வாங்கிட்டு வந்துடுங்க என்று மீனா சொல்ல நான் எதுக்கு போகணும் என்று கேள்வி கேட்க நீங்கதானே கடையை வைத்து குடுத்தீங்க நீங்க தான் பூ வாங்கிட்டு வந்து கொடுக்கணும் என கூறுகிறார்.
அம்மாவை எதுக்கு கூட்டிட்டு போகணும்? நீ வா நீயும் நானுமே போயிட்டு வாங்கிட்டு வரலாம் என்று சொல்கிறார் முத்து. ரூமுக்குள் வந்ததும் மீனா கடை வைத்தது குறித்து பேசி சந்தோஷத்தில் கண்ணீர் விட முத்து இப்ப எதுக்கு அழுதுட்டு இருக்க என்று கேட்க இது சந்தோஷத்தில் அழுகிறது என கூறுகிறார்.
அப்படி நான் பத்து நாள் சந்தோஷ படாத கொஞ்சம் சேர்த்து வச்சுக்க அடுத்தடுத்த லெவலுக்கு போகும்போது இன்னும் சந்தோஷப்பட வேண்டியது இருக்கும் என சொல்கிறார். பிறகு மீனா முத்துவை கட்டி பிடித்துக் கொள்ள முத்துவும் சந்தோஷத்தில் மீனாவை கட்டிக் கொள்கிறார்.
மறுநாள் காலையில் இரண்டு பேரும் மார்க்கெட்டுக்கு கிளம்பி பூ வாங்கிக்கொண்டு டீ குடித்துவிட்டு வரும் வழியில் சாப்பிட மீனா எல்லாரும் வேலைக்கு போறவங்க அவங்களுக்கு சாப்பாடு வாங்கிட்டு போயிடலாம் என்று சொல்ல நீ சொன்னா கேட்கவா போற என்று முத்து வாங்கி கொண்டு கிளம்பி வருகிறார்.
மீனா காபி எங்க எவ்வளவு நேரம் என்று கத்திக்கொண்டே இருக்க நான் கேட்டுட்டே இருக்கேன் பதில் சொல்லாம இருக்க என்று கோபப்பட அண்ணாமலை நீ கழுதையா இல்ல குதிரையா கத்துனா கூட பதில் வராது என மீனா இல்ல பிஸியா ஆயிட்டா, நாலு மணிக்கு எழுந்து பூ வாங்க கடைக்கு போய்ட்டாங்க உனக்கு காபி வேணுனா நீ போய் போட்டு குடி என்று சொல்ல எனது நான் காபி போடணுமா என்று விஜயா ஷாக்காக என்ன இதுக்கே உன் முகம் கசாயம் குடிச்சா மாதிரி ஆகுது என்று நக்கல் அடிக்கிறார் அண்ணாமலை. இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.


