Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கோபத்தில் விஜயா, ஸ்ருதி அப்பா செய்த வேலை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

siragadikka aasai serial episode update 04-05-24

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சத்தியா முத்துக்கு வீடியோவை காட்டி இப்ப சொல்லு யாரு குடிகாரன் என்று கேள்வி கேட்டு மீனாவை அவமானப்படுத்துகிறார். ஊரே குடிகாரனு உன் புருஷனை கழுவி கழுவி ஊத்துது. ஜெயில்ல போடணும் தூக்குல போடணும்னு சொல்லிக்கிட்டு இருக்காங்க என்று கமெண்ட் படிக்க மீனா ஆவேசமாக எழுந்து வெளியே வருகிறார்.

மறுபக்கம் முத்து கஷ்டமரை ஏற்றிக்கொண்டு கார் ஓட்டிக்கொண்டு செல்ல அப்போது முத்துவின் வீடியோவை பார்த்து அவர்கள் காரை ஓரங்கட்ட சொல்லி இறங்கிக்கொள்ள முத்து ஒன்றும் புரியாமல் இருக்கிறார். பிறகு அடுத்தடுத்த சவாரிக்கு போன் கால் வருகிறது. முத்து கிளம்பிய கொஞ்ச நேரத்தில் திரும்பவும் போன் வந்து சவாரியை கேன்சல் செய்து விட்டதாக ஷாக் கொடுக்கின்றனர்.

வீட்டுக்கு வந்த மனோஜ் இந்த வீடியோவை போட்டு காட்டி அனைவருக்கும் அதிர்ச்சி கொடுக்கிறார். நான் பார்க்ல சும்மா தான் படுத்துட்டு இருந்தேன். இவன் குடிச்சிட்டு கார் ஓட்டிட்டு ஊர் முழுக்க அவமானப்பட்டு கிட்டு இருக்கான் என்று சொல்ல ரவி முத்து டியூட்டி டைம்ல அப்படி குடிக்க மாட்டான் என்று சொல்ல மனோஜ் அதான் வீடியோவே இருக்கே, அவன் வீட்டுக்கு வரும்போது குடிச்சிட்டு தானே கார் ஓட்டிட்டு வருவான் இப்போ பகலிலேயே குடிக்கிறானோ என்னமோ என்று சொல்கிறார்.

விஜயா என்ன வேலை பண்ணிட்டு இருக்கான் பாருங்க சொந்தக்காரங்க எல்லாம் அவமானப்படுத்தி பேசுவாங்க. நாக்கு பிடுங்கிற மாதிரி கேள்வி கேப்பாங்க. வெளியவே தலை காட்ட முடியாது. சம்பந்தி வீட்டுக்காரர்களுக்கு இதெல்லாம் தெரிஞ்சா என்ன ஆகும் என்று கோபப்பட்டுக் கொண்டிருக்க ஸ்ருதியின் அப்பா போன் பண்ண ஐயோ அவருக்கு வேற தெரிஞ்சிடுச்சா என்று பதறுகிறார். அடுத்ததாக ஆளாளுக்கு போன் கால் வர விஜயாவுக்கு பார்வதி போன் பண்ணுகிறார்.

ரோகினி மனோஜ் பண்ண சின்ன சின்ன தப்பை எல்லாம் கேட்டு பெரிய பிரச்சனையாக்கின முத்து இன்னிக்கி இவ்வளவு பெரிய தப்பு பண்ணி இருக்காரு அவரை என்ன பண்றது என்று அண்ணாமலையை பார்த்து கேள்வி கேட்கிறார்.

ஒரு பக்கம் வாசுதேவன் கமிஷனருக்கு போன் போட்டு இந்த வீடியோ பற்றி பேசி இதெல்லாம் நீங்க தடுத்து நிறுத்தணும் இல்லனா பெரிய விபத்து ஏற்படும் என்று சொல்லி ஃபோனை வைக்க கமிஷனர் வண்டியை சீஸ் செய்து லைசென்ஸ் பிளாக் செய்ய சொல்லி உத்தரவிடுகிறார். அதன் பிறகு முத்து காரில் வந்து கொண்டிருக்கிறேன். அவரை வழி மறிக்கும் போலீஸ் லைசென்ஸ் பிடுங்கி கொண்டு காரையும் எடுத்துச் செல்ல முத்து நான் குடிக்கல என்று சொல்லியும் அதை அவர்கள் கேட்க மறுக்கின்றனர். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது‌.

siragadikka aasai serial episode update 04-05-24
siragadikka aasai serial episode update 04-05-24