siragadikka aasai serial episode update 02-05-24
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து கார் செட்டில் நின்று நண்பர்களிடம் மனோஜ்க்கு பணம் வந்ததைப் பற்றி பேசி கொண்டிருக்க அவர்கள் தங்கச்சி சொன்னது தான் சரி என்று சொல்கிறார்கள்.
இந்த நேரத்தில் ஜோசியக்காரர் ஒருவர் வந்து முத்துவின் முகத்தைப் பார்த்து சில விஷயங்களை சொல்ல முத்து பணத்தை எடுத்து கொடுத்து டீ சாப்பிட்டு போங்க என்று சொல்ல எனக்கு பணம் வேண்டாம் ஜக்கம்மா உன்கிட்ட பேச சொல்ற உன் கைய காட்டு என்று கூறுகிறார்.
முத்து எனக்கு அதெல்லாம் நம்பிக்கை கிடையாது தினம் தினம் நான் பிரச்சனையை தோல் மேல போட்டுகிட்டு சுத்துறவன் என்று சொல்கிறார். நண்பர்கள் கைய காட்டுப்பா என்று காட்ட வைக்க இன்னைக்கு உனக்கு பெரிய ஆபத்து இருக்கு, நீ எது செஞ்சாலும் யோசித்து செய்யவும் இல்லனா இந்த ஊரு ஏசும் இடத்துக்கு தள்ளப்படுவ என்று சொல்கிறார்.
முத்து பணத்தை எடுத்துக் கொடுத்து சரி போயிட்டு வாங்க என்று அனுப்பி வைக்க அந்த ஏரியா தலைவரிடம் இருந்து போன் வருகிறது. அவர் என்னமோ சொன்னாரு ஆனா இப்போ நல்ல சவாரி தான் வந்து இருக்கு என்று சொல்லி முத்து கிளம்பி செல்கிறார்.
மறுபக்கம் மீனா உடம்பு சரியில்லாத அம்மாவை பார்க்க வந்திருக்க அப்போது சத்யா சிட்டியுடன் வந்து இறங்க மீனா சிட்டியை பிடித்து என் தம்பி கூட எதுக்கு சுத்திகிட்டு இருக்க? என்று கோபப்படுகிறார். மீனா சிட்டியை அடிக்க போக சத்தியா மீனாவை எதிர்த்து பேசுகிறார். விடு சத்யா அக்கா தானே பேசுறாங்க, பேசிட்டு போகட்டும் என்று சிட்டி அங்கிருந்து கிளம்புகிறார்.
மறுபக்கம் மனோஜ் ஒரு ஏஜென்சிக்கு வந்து கார் வாங்குவதற்காக தேடிப்பிடித்து ஒரு காரை செலக்ட் செய்து ரோகிணியை அங்கே வர சொல்கிறார். முத்து தலைவரை பார்த்த பிறகு அவர் தன்னுடைய நண்பர் என ஒருவரை அறிமுகம் செய்து வைத்து அவர் ஆந்திராவில் இருந்து வந்திருக்காரு கார் வாங்கணும்னு ஆசைப்படுறாரு என்று சொல்கிறார். உனக்குத்தான் காரை பத்தி ரொம்ப நல்லா தெரியும்ல அதனால தான் வர சொன்னோம் என்று சொல்கிறார்.
இதையடுத்து முத்து எனக்கு தெரிஞ்ச ஒரு நல்ல ஏஜென்சி இருக்கு நம்பிக்கையான இடம் என் காரை கூட அங்க தான் வாங்கினேன் என்று கூட்டி சொல்கிறார். மனோஜ் ரோகிணி கூட்டிட்டு செலக்ட் பண்ணி வைத்திருக்கும் காரை காட்ட முதலில் கார் வேண்டாம் என்று சொல்லிய ரோகிணி காரை பார்த்த பிறகு சரி ரேட் பேசி பார்க்கலாம் என்று சொல்லி உள்ளே செல்கிறார்.
மறுபக்கம் முத்து தலைவரையும் அவரது நண்பரையும் கூட்டி வந்து கார்களை காட்ட அவர் நம்பர் செட்டாகல கார் செட் ஆகல என்று சொல்லிக்கொண்டே இருக்க கடைசியில் மனோஜ் செலக்ட் செய்து வைத்திருந்த கார் சூப்பரா இருக்கு அதையே எடுத்துவிடலாம் என்று சொல்கிறார். பிறகு அந்த காரை புக் பண்ணிடலாம் என்று சொல்ல அதை வேற ஒரு தொழிலதிபர் புக் பண்ணிருக்காரு என்று ஓனர் சொல்ல இவர்கள் அந்த கார் தான் வேண்டுமென்று செல்கின்றனர்.
சரி அந்த தொழிலதிபர் கிட்ட பேசி பார்க்கலாம் என்று முத்து வர அது மனோஜ் ரோகிணி என்று தெரிந்ததும் இவங்கதான் அந்த தொழிலதிபரா இவன் வேலையே இல்லாத வெட்டி பையன். அவனை நம்பி எல்லாம் காரை கொடுக்காதீங்க அவர் லோன் கூட கட்ட மாட்டான் காரை தூக்கிட்டு ஓடி விடுவான் என்று சொல்லி அந்த காரை தலைவரின் நண்பருக்கே வாங்கி கொடுக்கிறார்.
இதனால் மனோஜ் மற்றும் ரோகிணி முத்து மீது பயங்கர கோபத்தில் கிளம்பி செல்கின்றனர். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
Thaainilam Official Trailer | Amar Ramachandran | Neha Amar | Abhilash G. Devan | Ouseppachan
Muttayi Vandi Tamil Video Song | Bethlehem Kudumba Unit-Vishnu Vijay | Girish AD | Nivin…
நடிகர் விக்கி கௌஷலைத் திருமணம் செய்துகொண்ட நடிகை கத்ரினா கைஃபுக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது. பிரசவத்திற்குப் பிறகு அவரது…
பான்-இந்தியா அளவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா, அடுத்ததாக பிரபல கர்நாடக இசைப் பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமியின்…
தமிழ் திரையுலகின் நட்சத்திர தம்பதியான சூர்யா – ஜோதிகா கடந்த 2006-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி திருமணம் செய்து…
நடிகை ராதா, தனது சகோதரி நடிகை அம்பிகா மற்றும் சகோதரர் மல்லிகார்ஜுனா குஞ்சன் நாயர் மீது இன்று சென்னை காவல்…