உண்மையை கண்டுபிடித்த மீனா. அதிர்ச்சியில் விஜயா. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் மீனா மற்றும் முத்து என இருவரும் காரில் வந்து கொண்டிருக்க அப்போது முத்து என்னுடைய அம்மா கடைசி நேரத்துல அந்த மனோஜ் பையனை காப்பாத்திட்டாங்க அவன் தான் ஏதோ திருட்டு வேலை பண்ணி இருக்கான் என்று சொல்லிக் கொண்டு வருகிறார்.

பிறகு வீட்டுக்கு போற ஏதாச்சு வாங்கிட்டு போ என்று சொல்லி முத்து காரை ஓரிடத்தில் நிறுத்த அப்போது முட்டுக்காட்டுக்கு சவாரி குறித்து போன் கால் வர முத்து உடனே வரேன் என்று சொல்லிவிட்டு மீனா விடம் பைனான்ஸ் கட்டிவிட்டு நீ ஆட்டோ புடிச்சு வீட்டுக்கு போயிடு என பணத்தை எடுத்து கொடுத்து விட்டு கிளம்புகிறார்‌.

அதைத் தொடர்ந்து மீனா வடிகட்ட பைனான்ஸ் ஆபிசுக்கு வர அங்கு யாரோ ஒருவர் கத்தி அழுவது போன்ற குரல் கேட்டு அது குறித்து விசாரிக்க அங்கிருந்த பெண் அந்த அம்மா வீட்டுக்கு தெரியாம பத்திரத்தை வைத்து 17 லட்சம் ரூபாய் பணம் வாங்கி இருக்கு வட்டியும் கட்டல அதனாலதான் புடிச்சு அடைச்சு வச்சிருக்கோம் என்று சொல்கிறார்.

அதன் பிறகு மீனா வீட்டிற்கு கிளம்பும்போது அது விஜயாவின் குரல் போல இருக்க சந்தேகப்பட்டு கீழே இறங்கி போய் அத்தை அத்தை என்று கூப்பிட விஜயா ஓடி ஒளிந்து கொள்கிறார். ஜோதி என்ற பெண் வந்து யாருமா நீ இங்க என்ன பண்ற என கேட்க எங்க அத்தை குரல் மாதிரி இருக்கு என்று சொல்ல விஜயா வெளியே வர அதை பார்த்து மீனா அதிர்ச்சி அடைகிறார்.

உடனே முத்துவுக்கும் அண்ணாமலைக்கும் தகவல் கொடுக்க ரவியை தவிர்த்து மற்ற எல்லோரும் இங்கே கூடி விடுகின்றனர். பிறகு பைனான்சியரிடம் விசாரிக்க பத்திரத்தை வைத்து 17 லட்சம் ரூபாய் பணம் வாங்கிய விஷயம் தெரிய வருகிறது. அண்ணாமலை விஜயாவை பிடித்து சத்தம் போட முத்து இவங்க அவனை விட பெரிய பிராடா இருப்பார்கள் போல என விலாசி எடுக்கிறார்.

பைனான்சியர் உங்கள் சண்டையெல்லாம் வீட்ல போய் வச்சுக்கோங்க இது தொழில் நடக்கிற இடம் எனக்கு எல்லாரும் கையெழுத்து போடுங்க என்று சொல்ல நான் எதுக்கு போடணும் அதெல்லாம் போட முடியாது என்று முத்து சத்தம் போட அண்ணாமலை என்ன பண்ணி தொலைக்கிறது உங்க அம்மாவை போய்ட்டா என் பொண்டாட்டியா போய்ட்டா அப்படியே விட்டுட்டு போக முடியாது கையெழுத்து போடுறேன் என்று ஒத்துக் கொள்கிறார்.

பிறகு ரவியை வரவைத்து அண்ணாமலை உட்பட மகன்கள் மூன்று பேரும் கையெழுத்து போட்டுக் கொடுக்கின்றனர். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Siragadikka aasai serial episode
jothika lakshu

Recent Posts

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் எப்போது ரிலீஸ் தெரியுமா? ரசிகர்களுக்கு விரைவில் குட் நியூஸ்

விஜய்யின் 'ஜனநாயகன்' படம் எப்போது ரிலீஸ் தெரியுமா? ரசிகர்களுக்கு விரைவில் குட் நியூஸ் நடிகரும் தவெக தலைவருமான விஜய்யின் கடைசிப்…

14 hours ago

வெளியில் பேசும் கதைகளை கேட்க எனக்கு டைம் இல்லை.. நடிகர் பொன்னம்பலம் விளக்கம்.!!

நான் வீல்ச்சாரில் இருப்பதை பார்த்துவிட்டு ஏதேதோ பேசுகிறார்கள் என்று நடிகர் பொன்னம்பலம் விளக்கம் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் நடிகர் தயாரிப்பாளர்…

14 hours ago

FEB 14 காதலர் தினத்தன்று ரீ ரிலீஸாகும் மூன்று காதல் படங்கள்!

FEB 14 காதலர் தினத்தன்று ரீ ரிலீஸாகும் மூன்று காதல் படங்கள்! சூர்யா நடிப்பில் அமீர் இயக்கிய முதல் படம்…

14 hours ago

ஆண் பெண் இருவருமே சுதந்திரமான வாழ்க்கையே வாழ விரும்புகிறார்கள்.. நடிகர் பார்த்திபன்.!!

நான் சீதாவை பிரிந்ததை நினைத்து ரொம்ப சந்தோஷப்படுகிறேன் என பார்த்திபன் கூறியுள்ளார் இயக்குனர்,நடிகர் இரண்டிலும் கலக்கி வருபவர் பார்த்திபன் இவர்…

14 hours ago

உருப்படியான வேலையை பாருங்கள்: பிரகாஷ்ராஜ் கோபம்; காரணம்.

உருப்படியான வேலையை பாருங்கள்: பிரகாஷ்ராஜ் கோபம்; காரணம். சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் ‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து…

14 hours ago

ஆவேசம் 2 அப்டேட் கொடுத்த பகத் பாசில்

ஆவேசம் 2 அப்டேட் கொடுத்த பகத் பாசில் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு படம், அடுத்த பாகமாக தொடர்வது வழக்கம் அவ்வகையில்…

14 hours ago