Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மீனா, முத்து இடையே ஏற்பட்ட வாக்குவாதம். நக்கல் அடித்த விஜயா. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

siragaddikka aasai serial episode

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் மீனா கோபமாக உட்கார்ந்து இருக்க முத்து வீட்டுக்கு வர அவனிடம் நகையை பற்றி கேட்க முத்து இன்னும் நகை கடைக்காரர் வரல ஊர்ல ஏதோ ஒரு விசேஷம் லேட்டாகும் என்று சொன்னாரு என சொல்லி சமாளிக்க இன்னும் நல்லா கதை விடுங்க, கொக்கி மாத்த நகை செய்றவங்க கிட்ட குடுப்பாங்க இல்லனா நகை கடையில் குடுப்பாங்க ஆனா நீங்க தான் அடகு கடையில் கொடுத்து இருக்கீங்க என விஷயத்தை சொல்ல முத்து அதிர்ச்சி அடைகிறார்.

நகை வச்சு குடிச்சிட்டீங்க என மீனா சொல்ல முத்து நான் குடிக்கல என சொல்ல வேற என்ன பண்ணீங்க என கேட்க முத்து எதுவும் சொல்லாமல் இருக்கிறார். இருவருக்கும் வாக்குவாதம் அதிகமாக முத்து வீட்டில் இருந்து வெளியே கிளம்புகிறார். பிறகு மீனா அண்ணாமலையிடம் இந்த விஷயத்தை சொல்ல இதைக் கேட்ட விஜயா சந்தோஷப்படுகிறார். முத்துவையும் மீனாவையும் நக்கலாக பேசுகிறார்.

அதன் பிறகு மறுநாள் காலையில் மீனா எழுந்து வெளியே வர அண்ணாமலை முத்து தூங்குறானா என கேட்க அவர் நைட் எல்லாம் வீட்டுக்கு வரல என்ற விஷயத்தை சொல்ல அண்ணாமலை போன் செய்து பார்க்க சுவிட்ச் ஆஃப் என வருகிறது. பிறகு அண்ணாமலை வாக்கிங் போகக் கீழே இறங்கி வர முத்து காரில் படுத்து தூங்குவதை பார்த்து அவனை தட்டி எழுப்புகிறார்.

வீட்டுக்கு வரவே புடிக்கல சும்மா கேள்வியா கேட்டுகிட்டு இருக்கா, எனக்கு போட்ட நகை தானே அதை நான் வச்சேன் அதுல என்ன இருக்கு என்று சொல்ல அண்ணாமலை நீ மீனா கிட்ட சொல்லி வச்சிருந்தா இந்த பிரச்சனையே இல்லை என சொல்கிறார். பிறகு அங்கு வரும் மீனாவை முத்து என்ன எல்லாத்தையும் ஒளிஞ்சிருந்து கேட்டியா என கேட்க நான் ஒன்னும் பயந்து ஒலியல நீங்க தான் வீட்டுக்கு வர பயந்துகிட்டு வெளியே படுத்து தூங்கி இருக்கீங்க என பதில் கொடுக்க இங்கும் வாக்குவாதம் அதிகமாகின்றது. மீனா நகை வச்சு குடிச்சீங்க என சொல்ல முத்து நான் குடிக்கல என சொல்லி அடிக்க பாய்கிறார்.

அதன் பிறகு மீனா கோபமாக தனது வீட்டுக்கு வர அவரது அம்மா அவருக்கு போட்ட நகையை அவர் வச்சு குடிச்சாரு அதுல என்ன இருக்கு என முத்துவுக்கு சப்போர்ட் செய்து பேச மீனா கோபப்பட்டு எழுந்து வீட்டுக்கு கிளம்புகிறார்.

பிறகு மனோஜ் வீட்டில் நடந்த விஷயங்களால் அப்செட்டாக இருக்க ரோகிணி ஃபோன் செய்து நன்றி சொல்கிறார். எனக்கு அங்க பார்ட்டியில் நடந்த விஷயங்கள் இன்னும் அப்படியே ஞாபகத்தில் இருக்கு என சொல்லி உங்களுக்கு ஒரு கிப்ட் வாங்கி வச்சிருக்கேன் நேரில் வாங்க என அழைக்கிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

அதன் பிறகு வெளியான ப்ரோமோ வீடியோவில் அண்ணாமலையின் நண்பர் மீனாவை பார்த்து பேருக்கேற்ற மாதிரி முத்து முத்து தான். அவன் பணம் மட்டும் ரெடி பண்ணி தரமா இருந்தா என் மனைவியை காப்பாற்றி இருக்க முடியாது என சொல்ல மீனாவுக்கு எல்லா விஷயங்களும் தெரிய வருகிறது.

siragaddikka aasai serial episode
siragaddikka aasai serial episode