singer sunitha 2nd marriage
பிரபல சினிமா பின்னணி பாடகி சுனிதா. இவர் தமிழில் விஜய்யின் பத்ரி படத்தில் இடம்பெற்ற காதல் சொல்வது… என்ற பாடலை பாடி பிரபலமானார். காதல் ரோஜாவே உள்ளிட்ட சில படங்களிலும் பாடி இருக்கிறார். இளையராஜா இசையிலும் பாடி உள்ளார். தெலுங்கில் ஏராளமான படங்களில் பாடி உள்ளார்.
மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துடன் இணைந்தும் பல பாடல்கள் பாடி இருக்கிறார். சில நடிகைகளுக்கு டப்பிங் குரல் கொடுத்துள்ளார். படங்களில் சிறிய கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கிறார். சுனிதாவுக்கு 19 வயதிலேயே திருமணம் முடிந்தது. கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து பிரிந்தார். இவருக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.
இந்த நிலையில் ஆந்திராவை சேர்ந்த தொழில் அதிபர் ராம் வீரபனேனி என்பவரை தற்போது சுனிதா 2-வது திருமணம் செய்து கொண்டார். இவர்கள் திருமணம் ஐதராபாத் அருகே உள்ள அம்மாபள்ளி ஶ்ரீ சீதாராம கோவிலில் நடந்தது. ஏராளமான திரைப்பிரபலங்கள் இதில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். ராம் வீரபனேனியும் சில வருடங்களுக்கு முன்பு மனைவியை விவாகரத்து செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
டாக்ஸிக் ரிலீஸ் தேதியில் அந்த படத்தை இறக்கும் கேவிஎன் தயாரிப்பு நிறுவனம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு! கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும்…
எப்படிப்பட்ட மனைவியாக இருக்க விரும்புகிறீர்கள்? - ஐஸ்வர்யா லட்சுமி விளக்கம்.. 'காதல் கல்யாணம்' பற்றி ஐஸ்வர்யா லட்சுமி விளக்கம்.. *…
திருமணத்திற்குப் பிறகு அரசு பள்ளி மாணவர்களுக்கு விஜய் தேவரகொண்டா கல்வி உதவி தொகை விஜய் தேவரகொண்டாவும் ராஷ்மிகா மந்தனாவும் கடந்த…
சாய் அபயங்கரின் அடுத்த பாடிய 'பவழமல்லி' பாடல் வைரல் முன்னணி இசையமைப்பாளராக உருவெடுத்து வருபவர் சாய் அபயங்கர். இன்டீ பாடல்கள்…
சூர்யா நடிக்கும் 'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு! சூர்யா நடித்துள்ள படத்துக்கு ‘விஸ்வநாத் & சன்ஸ்’…
‘புருஷன்’ படப்பிடிப்பின் போது முதியோர் இல்லத்திற்கு நடிகர் விஷால் உதவி! நடிகர் விஷால் நடித்துவரும் புதிய திரைப்படமான “புருஷன்” படப்பிடிப்பு…