singer ramla-begum-passes-away
கேரள மாநிலத்தில் மாப்பிளப்பாட்டு பாடல்களால் ரசிகர்களின் மனதை கவர்ந்த பிரபல பாடகி ரம்லா பேகம் (வயது 86). வயது முதிர்வு காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர் கோழிக்கோடு பரப்பட்டியில் உள்ள தனது இல்லத்தில் காலமானார். கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் 1946-ம் ஆண்டு பிறந்த அவர், ரம்லா இந்தி பாடல்களை பாடியதன் மூலம் தனது இசை பயணத்தை சிறுவயதிலேயே தொடங்கினார். பின்பு ஆலப்புழாவில் உள்ள இசைக்குழுவில் இடம்பெற்றிருந்த அவர், ஏராளமான மலையாள இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்றதன் மூலம் பிரபலமானார்.
கேரள மாநிலம் மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் சென்று இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருக்கிறார். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரங்குகளில் கதாபிரசங்கம் கொடுத்த சாதனை ரம்லா பேகத்துக்கு உள்ளது. தடைகளை மீறி பல கோவில்களிலும் இவர் பாடியிருக்கிறார். 500-க்கும் மேற்பட்ட கேசட்டுகள், 35-க்கும் மேற்பட்ட கிராமபோன் இசைத்தட்டுகளிலும் பாடியுள்ள அவர், பல விருதுகளையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Love Insurance Kompany Trailer | Pradeep Ranganathan | Anirudh | Vignesh Shivan | Krithi Shetty
Yenjaamiye Video Song | Manithan Deivamagalam | Selvaraghavan, Kushee Ravi | AK Prriyan
Nooru Sami Official Teaser | Vijay Antony | Swasika | Ajay Dhishan | Lijomol Jose…
கார் மெக்கானிக்காக இருக்கும் லெஜண்ட் சரவணன், தூத்துக்குடி பகுதியில் தனது மகளுடன் அமைதியாக வாழ்ந்து வருகிறார். ஹார்பரில் வரும் கார்களுக்கு…
புறநகர் சென்னையில் உள்ள பெரிய அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தம்பதியின் சிறுமி திடீரென மாயமாகிறாள். இந்த வழக்கை விசாரிக்க வரும்…
இலங்கையில் இந்திய அமைதிப்படையும் போராளிகளும் மோதிக்கொண்டிருக்கும் பதற்றமான காலகட்டத்தில், ஒரு சாதாரண குடும்பம் எளிமையாக நடத்த திட்டமிட்டிருந்த திருமணம் எதிர்பாராத…