தமிழ் சினிமாவின் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான சர்க்கார் படத்தில் சிம்டாங்காரன் என்ற பாடலை பாடியவர் பம்பா பாக்கியா. இந்த பாடல் மூலம் மிகவும் பிரபலமாக பேசப்பட்ட இவர் புள்ளினங்கால், காலமே உள்ளிட்ட பல்வேறு பாடல்களை பாடியுள்ளார்.
அது மட்டுமல்லாமல் பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பெற்றுள்ள பொன்னி நதி என்ற பாடலையும் பாடியுள்ளார். இவர் திடீரென மரணம் அடைந்ததாக வெளியான தகவல் ரசிகர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலரும் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஆனால் இவரது மறைவிற்கு என்ன காரணம் என்பது குறித்து தகவல்கள் வெளியாகவில்லை. மாரடைப்பாக இருக்கலாம் என சொல்லப்பட்டு வருகிறது.
