தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிங்க பெண்ணே. இந்த சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற ஒளிபரப்பாகி வருகிறது கடந்த வாரம் கூட இந்த சீரியல் டிஆர்பியில் முதலிடத்தை பிடித்திருந்தது.
தற்போது ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம் குடும்பத்தினருக்கு தெரிய வர கர்ப்பத்திற்கு காரணமாக இருப்பவரை நிரூபித்து காட்டுவேன் என சவால் விட்டு விட்டு சென்னைக்கு வருகிறார்.
மகேஷ் தான் ஆனந்தியின் கர்ப்பத்திற்கு காரணம் என்பதை எப்படி கண்டுபிடிக்க போகிறார் என்ன நடக்கப் போகிறது என்ற பரபரப்பான கதை களத்துடன் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த நிலையில் இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து வரும் மனிஷா ஒரு நாளைக்கு 12000 சம்பளம் வாங்குவதாக சொல்லப்படுகிறது. இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
