மலச்சிக்கல் பிரச்சனையை நீக்க நாம் என்ன செய்ய வேண்டும் பார்க்கலாம்.
பொதுவாக மலச்சிக்கல் பிரச்சனை என்பது அனைவருக்கும் வரும் ஒன்று. அப்படி வருவதற்கு காரணம் என்னவென்றால் செரிமான செயல்முறை சீராக செயல்படவில்லை என்றால் தான் மலச்சிக்கல் பிரச்சனை உண்டாகும். மேலும் மலச்சிக்கல் பிரச்சனைக்கு உணவு
ஒரு முக்கிய காரணமாக இருக்கும்.
மலச்சிக்கல் வருவதற்கான காரணங்கள் என்னவென்றால் நாம் அன்றாடம் உண்ணும் உணவில் நார்ச்சத்து குறைவாகவோ அல்லது சாப்பிடாமல் இருந்தாலும் மலச்சிக்கல் வர வாய்ப்பு அதிகம். மேலும் மைதா சேர்ந்த பொருட்களை சாப்பிடுவதனால் மலச்சிக்கல் வர அதிக வாய்ப்பு உள்ளது.
இதனைத் தொடர்ந்து ஒரே இடத்தில் மணிக்கணக்கில் உட்கார்ந்து இருக்கும் போதும் தேவையான அளவு தண்ணீர் குடிக்காமல் இருக்கும்போதும் இந்தப் பிரச்சனை வரக்கூடும்.
அப்படி மலச்சிக்கல் வந்தால் எளிய முறையில் நம் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து எப்படி சரி செய்ய முடியும் என்று பார்க்கலாம்.
முதலில் மலச்சிக்கல் ஏற்பட்டால் அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும் பிறகு பச்சை காய்கறி மற்றும் சாலட் உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இரவு உணவிற்கு நாம் கிச்சடி சாப்பிடுவது சிறந்த உணவாக இருக்கும். உணவு சாப்பிட்ட பிறகு 30 நிமிடங்கள் நடந்து விட்டு பிறகு தூங்கச் செல்ல வேண்டும்.
தினமும் ஒரு ஸ்பூன் வெந்தயத்தை ஊற வைத்து தண்ணீரிலிருந்து எடுத்து சாப்பிட்ட பிறகு அந்த தண்ணீரை குடித்து வந்தால் வயிறு சுத்தமாக இருக்கும். மேலும் உணவு சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்து ஒரு டம்ளர் பால் குடிப்பது மலச்சிக்கல் பிரச்சனையை போக்க பெருமளவில் உதவுகிறது.
இப்படி மலச்சிக்கல் பிரச்சனையை நம் வீட்டிலேயே எளிய முறையில் நீக்கி ஆரோக்கியமாக வாழலாம்