பல் வலியை எளிமையாக குணப்படுத்துவது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.
பல் வலி என்பது ஒருவருக்கு வந்தால் அந்த நாளில் வேலையை செய்வதே மிகவும் கடினமாகிவிடும். அப்படிப்பட்ட பல் வலியை மருத்துவமனைக்கு போகாமலேயே வீட்டில் உள்ள பொருட்களை வைத்து குணப்படுத்தலாம்.
முதலில் கிராம்பு எண்ணையை காட்டனில் எடுத்து பற்கள் வலி உள்ள இடத்தில் தேய்த்து வர வேண்டும்.
கிராம்புகளை மென்று சாப்பிட்டு முழுங்குவது இன்னும் சிறந்தது.
இரண்டாவதாக பூண்டு பற்களை சிறிது சிறிதாக தட்டி வழி உள்ள இடத்தில் வைத்து விட வேண்டும். ஏனெனில் பூண்டில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் அதிகம் உள்ளது. இது பற்களில் உள்ள கிருமிகளை நீக்கி வலியிலிருந்து விடுபட பெருமளவில் உதவுகிறது.
இதனைத் தொடர்ந்து ஐஸ் கட்டிகளை ஒரு துணியில் எடுத்து கன்னங்களுக்கு அருகில் வைக்க வேண்டும். அப்படி வைக்கும் போது ஈறுகளின் வீக்கம் குறைந்து வலிக்குறையும்.
இறுதியாக கொய்யாவின் இலைகளை நன்றாக மெல்ல வேண்டும். அப்படி சாப்பிடும் போது படிப்படியாக குறைய தொடங்கும். மேலும் கொய்யா இலைகளை தண்ணீரில் வேகவைத்து வடிகட்டி வாய் கழுவ பயன்படுத்தலாம். இப்படி எளிய முறையில் பல்வலியை நீக்கி ஆரோக்கியமாக வாழலாம்.