பெரும்பாலும் ஆண்கள் மட்டுமில்லாமல் பெண்களும் தொப்பையால் அவதி பட்டு வருகின்றன.உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகம் இருப்பதால் ஏற்படும் விளைவு தான் இது.
இதனை எளிய பயிற்சி முறையில் சரி செய்யலாம். ஆண்களுக்கு ஏற்படும் தொப்பையை பெரும்பாலானோர் ஜிம்மிற்கு சென்று குறைப்பது உண்டு.
ஜிம்மிற்கு போக முடியாதவர்களுக்கு வீட்டிலேயே பயிற்சி செய்யலாம்.
முதலில் ஓரிடத்தில் நேராக நின்று இடது முழங்காலை தூக்கி மார்பின் மீது வைக்கவும். பிறகு வலது முழங்காலை தூக்கிவைத்து மாற்றி மாற்றி பத்து நிமிடம் தொடர்ந்து செய்ய வேண்டும். அதுமட்டுமில்லாமல் ஜம்பிங் ஜாக்ஸ் முறையில் கால்களை அகலமாக விரித்து குதித்தபடி கை தட்ட வேண்டும்.
தொடர்ந்து பத்து நிமிடம் இந்த பயிற்சியை செய்தால் நல்ல பலன் தரும்.
தொப்பையை கரைக்க உடற்பயிற்சி மற்றும் சைக்கிள் ஓட்டுவது மிகவும் நல்லது சைக்கிள் ஓட்டுவதன் மூலம் அடிவயிற்றுத் தசை வலுப்படும் எளிதில் தொப்பை கரையும்.
இவ்வாறு நம் வீட்டிலேயே உடற்பயிற்சி செய்து நம் தொப்பையை குறைத்து எளிமையான முறையில் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

