நடிகர் சிம்பு வெந்து தணிந்தது காடு என்ற படத்தை தொடர்ந்து தீவிரமாக நடித்துக் கொண்டிருக்கும் படம் தான் பத்து தல. இப்படத்தை சூர்யா நடிப்பில் வெளியான ‘சில்லுனு ஒரு காதல்’ என்ற படத்தை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணா இயக்கி வருகிறார். கன்னடத்தில் சூப்பர் ஹிட்டடித்த ‘முஃப்தி’ என்னும் படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகும் இப்படத்தில் சிம்புவுடன் இணைந்து பிரியா பவானி சங்கர், கௌதம் கார்த்திக், டீஜே அருணாச்சலம், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார். இந்தப் படத்தில் சிம்பு ஏ.ஜி.ஆர் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் இப்படம் வரும் டிசம்பர் 24-ம் தேதி வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் சிம்பு பத்து தல படப்பிடிப்பில் மலையாள நடிகை அனுசித்தரா உடன் காணப்படும் வீடியோ இணையத்தைக் கலக்கி வருகிறது. இதன் மூலம் மலையாளத்தில் பிரபல நடிகையாக வலம் வரும் அனுஸிதரா இந்தப் படத்தில் இணைந்துள்ளதாகத் தெரிகிறது.