Simbu double role in Maanaadu
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் மாநாடு படத்தை வி ஹவுஸ் புரடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறார்.
இப்படத்தில் சிம்பு அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். அரசியல் கலந்த கமர்ஷியல் படமாக இது உருவாகி வருகிறது.
சமீபத்தில் மாநாடு படத்தின் போஸ்டர்கள் வெளியிடப்பட்டன. இதில் இரண்டு வித்தியாசமான கெட்டப்பில் சிம்பு இடம்பெற்றிருந்தார். இதனால் இப்படத்தில் சிம்பு இரட்டை வேடத்தில் நடித்து வருவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவின.
இந்நிலையில், இதுகுறித்து மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சமீபத்திய பேட்டியில் விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது: ‘மாநாடு’ படத்தில் சிம்பு ஒரே வேடத்தில்தான் நடித்து வருகிறார். இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்று கூறப்படும் தகவலில் உண்மை இல்லை. ‘மங்காத்தா’ படத்தை அடுத்து மாபெரும் வெற்றிப்படமாக வெங்கட்பிரபுவுக்கு ’மாநாடு’ படம் இருக்கும்” என அவர் கூறியுள்ளார்.
Asku Macha Lyrical Video | Drones | Siddhi Idnani | Anjali Nair | Dravid Selvam…
Bloody Politics Official Teaser | Gautham Ram Karthik | Anchana Nethrun | Dhina Raghavan |…
PAAVAI Official Trailer | Rahul Vignesh | Mullai | Niranjana | Senduran | Anosh
DHEIVAA Taster - Refire with Uyiri | Shanthakumar Chandramohan | Bala Subramaniam | Dheena Dhayalan
Centimeter Lyric Video | XY | C.V. Kumar | Srikant Krishna | Sreekanth Hariharan |…
Kalla Nikkiriye Lyric Video | Anbil Avan | Ashok Selvan | Preity | Govind Vasantha…