‘மாநாடு’ படத்தில் சிம்புவுக்கு இரட்டை வேடமா? – தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி விளக்கம்

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் மாநாடு படத்தை வி ஹவுஸ் புரடக்‌‌ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறார்.

இப்படத்தில் சிம்பு அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்‌ஷன் நடிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். அரசியல் கலந்த கமர்ஷியல் படமாக இது உருவாகி வருகிறது.

சமீபத்தில் மாநாடு படத்தின் போஸ்டர்கள் வெளியிடப்பட்டன. இதில் இரண்டு வித்தியாசமான கெட்டப்பில் சிம்பு இடம்பெற்றிருந்தார். இதனால் இப்படத்தில் சிம்பு இரட்டை வேடத்தில் நடித்து வருவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவின.

இந்நிலையில், இதுகுறித்து மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சமீபத்திய பேட்டியில் விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது: ‘மாநாடு’ படத்தில் சிம்பு ஒரே வேடத்தில்தான் நடித்து வருகிறார். இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்று கூறப்படும் தகவலில் உண்மை இல்லை. ‘மங்காத்தா’ படத்தை அடுத்து மாபெரும் வெற்றிப்படமாக வெங்கட்பிரபுவுக்கு ’மாநாடு’ படம் இருக்கும்” என அவர் கூறியுள்ளார்.

Suresh

Recent Posts

‘புருஷன்’ படப்பிடிப்பின் போது முதியோர் இல்லத்திற்கு நடிகர் விஷால் உதவி!

‘புருஷன்’ படப்பிடிப்பின் போது முதியோர் இல்லத்திற்கு நடிகர் விஷால் உதவி! நடிகர் விஷால் நடித்துவரும் புதிய திரைப்படமான “புருஷன்” படப்பிடிப்பு…

20 hours ago

‘ஜெயிலர்-2’ படத்தில் ரஜினியுடன் நடித்தது பற்றி, வெஞ்சரமுடு அப்டேட்ஸ்..

'ஜெயிலர்-2' படத்தில் ரஜினியுடன் நடித்தது பற்றி, வெஞ்சரமுடு அப்டேட்ஸ்.. 'ஜெயிலர் 2’ படத்தில் ரஜினியுடன் நடித்த அனுபவங்களை பகிர்ந்துள்ளார் சுராஜ்…

23 hours ago

‘போர்முழக்கம்’ வக்கீலாக களமிறங்கும் வடிவேலு

'போர்முழக்கம்' வக்கீலாக களமிறங்கும் வடிவேலு வடிவேலு அடுத்து நடிக்கும் படத்துக்கு ‘போர்முழக்கம்’ என தலைப்பிடப்பட்டு உள்ளது. முன்னணி காமெடி நடிகரான…

23 hours ago

“விஜய்தான் எனக்கு குரு!” – இயக்குநர் பாலா பேச்சு

"விஜய்தான் எனக்கு குரு!" - இயக்குநர் பாலா பேச்சு ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘காதல் ரீசெட் ரிப்பீட்’. ஹாரிஸ்…

23 hours ago

ஹீரோவாக களம் இறங்குகிறாரா அனிருத்?

ஹீரோவாக களம் இறங்குகிறாரா அனிருத்? ஜி.வி.பிரகாஷ், விஜய் ஆண்டனி ஆகியோர் நாயகனாகவும் வலம் வருகிறார்கள். அந்த வரிசையில் அனிருத் பற்றிய…

23 hours ago

தலைவர் ரஜினி & கமல் கூட்டணியின் இணைந்த மம்மூட்டி!

தலைவர் ரஜினி & கமல் கூட்டணியின் இணைந்த மம்மூட்டி! ரஜினி, கமல் 47 ஆண்டுகள் கழித்து சேர்ந்து நடிக்கும் படத்தை…

23 hours ago