லெமன் டீ குடிப்பதால் ஏற்படும் பக்கவிளைவுகள் குறித்து பார்க்கலாம்.
உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும் குறிப்பாக லெமன் டீயில் எண்ணற்ற ஊட்டச்சத்துகளும் ஆரோக்கியமும் நிறைந்திருக்கிறது.ஆனால் அதனை அளவிற்கதிகமாகவோ இல்லை சாப்பிடக்கூடாத நேரத்தில் சாப்பிட்டாலோ அது சில பக்க விளைவுகளை ஏற்படுத்தும் எப்பொழுது சாப்பிடக்கூடாது எந்த உணவோடு சேர்த்து சாப்பிடக்கூடாது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
சர்க்கரைவள்ளி கிழங்கு சாப்பிட்டு லெமன் டீ குடித்தால் செரிமானத்தை பாதிக்கப்படுவது மட்டுமில்லாமல் வயிற்றில் வீக்கம் ஏற்படும்.
மேலும் அசைவம் சாப்பிடும் போது லெமன் டீ குடித்தால் அது வாயு பிரச்சனையை ஏற்படுத்தும்.
பால் பொருட்கள் மற்றும் காரமான உணவுகள் சாப்பிட்ட பிறகு லெமன் டீ அருந்தக்கூடாது ஏனெனில் அது அமிலத்தன்மை இருப்பதால் வயிறெரிச்சல் ஏற்படும்.
உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகள் என்றாலும் அதை எந்த நேரத்தில் சாப்பிட வேண்டும் எப்படி சாப்பிட வேண்டும் என்பதை தெரிந்து இருக்க வேண்டும். அதனை தெரிந்து கொண்டு ஆரோக்கியமான உணவை சாப்பிட்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.