மாதுளை பழம் அதிகம் சாப்பிடுவதால் நம் உடலுக்கு சில பக்க விளைவுகளை ஏற்படுகிறது.
உடலுக்கு ஆரோக்கியமும் எண்ணற்ற ஊட்டச்சத்துக்களும் கொடுக்கக்கூடிய முக்கியமான பழங்களில் ஒன்று மாதுளை பழம். இதில் நார்ச்சத்து, பொட்டாசியம், வைட்டமின் சி போன்ற எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் இருக்கிறது. இது சாப்பிடும் போது உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கொடுப்பதிலிருந்து செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனையை நீக்குவது வரை பெரும்பாலான நோய்க்கு மருந்தாகவே இருந்திருக்கிறது. ஆனால் அதனை அளவுக்கு அதிகமாக சாப்பிடும்போது நம் உடலுக்கு சில பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை தெரிந்து கொள்வோம்.
மாதுளை பழம் அளவுக்கு அதிகமாக சாப்பிடும் போது அது ரத்த அழுத்தத்தை ஏற்படுத்துவது மட்டும் இல்லாமல் வயிற்றுப்போக்கு பிரச்சனையை ஏற்படுத்திவிடும்
குறிப்பாக சரும பிரச்சனை மற்றும் ஒவ்வாமை பிரச்சனை வர அதிக வாய்ப்புள்ளது.
எனவே ஆரோக்கியம் நிறைந்த மாதுளம் பழத்தை சாப்பிட்டாலும் அளவுக்கு அதிகமான உணவு உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை அறிந்து அளவோடு சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழலாம்.

