எலுமிச்சை பழம் ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் பக்கவிளைவுகள் குறித்து பார்க்கலாம்.
உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும் குறிப்பாக எலுமிச்சை பழம் ஜூஸில் எண்ணற்ற ஊட்டச்சத்துகளும் ஆரோக்கியமும் நிறைந்திருக்கிறது ஆனால் அதனை அழகு அதிகமாக குடிக்கும் போது உடலுக்கு சில பக்க விளைவுகள் ஏற்படும் என்பது உங்களுக்கு தெரியுமா? அதனை குறித்து நாம் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
சிறுநீரக கல் பிரச்சினை இருப்பவர்கள் எலுமிச்சை பழம் ஜூஸ் அதிகமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.
எலும்பு வலி மற்றும் மூட்டு வலி பிரச்சனையை உண்டாக்கக் கூடும்..
வாய்ப்புண் வருவது மட்டுமில்லாமல் செரிமானத்தில் பிரச்சனையை ஏற்படுத்தி குமட்டல் மற்றும் எரிச்சலை உண்டாக்கும்.
எனவே எலுமிச்சை பழச்சாறு உடலுக்கு ஆரோக்கியம் என்றாலும் அதனை அளவிற்கு அதிகமாக சாப்பிடும்போது சில பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என்பதை அறிந்து எந்த ஒரு உணவையும் அளவோடு சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழலாம்.