shrutika-statement-in-cook with comali 3-finale
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது.
நேற்று நடந்து முடிந்த கிராண்ட் பினாலே நிகழ்ச்சியில் ஸ்ருதிகா டைட்டில் வின்னர் ஆக வெற்றி பெற்றார். அவருக்கு 5 லட்சம் ரூபாய் மற்றும் ப்ரீத்தி ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டன.
அது மட்டுமல்லாமல் அவருடைய கோமாளியான புகழுக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. மேலும் சிறந்த கோமாளியான பாலாவுக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.
புகழ் தனக்கு வழங்கப்பட்ட ஒரு லட்சம் ரூபாயை பாலாவுக்கு வழங்குவதாக அறிவித்தார். பாலா தனக்கு கிடைத்த பணத்தை பெரம்பலூரில் உள்ள ஒரு ஆசிரமத்தில் வசிக்கும் ஆதரவற்ற பெண் குழந்தைகளின் படிப்பு செலவுக்கு வழங்குவதாக அறிவித்தார்.
இதனையடுத்து ஸ்ருதிகா தனக்கு கிடைத்த பரிசு பணத்தில் ஒரு லட்சம் ரூபாயை அதை ஆசிரமத்திற்கு வழங்குவதாக அறிவித்தார். புகழ், பாலா மற்றும் ஸ்ருதிகா என மூவரும் செய்த இந்த செயல் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.
பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…
இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…
தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…
Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…