தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஸ்ருதிஹாசன். இவர் நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகள் ஆவார். தமிழ் சினிமாவில் “ஏழாம் அறிவு” என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர் அதில் கிடைத்த வெற்றியின் மூலம் தொடர்ந்து பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து பல படங்கள் நடித்திருந்தார். இவர் நடிப்பில் தமிழில் இறுதியாக வெளியான “லாபம்” திரைப்படம் ரசிகர்களின் இடையே கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. தற்போது பல படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும்
ஸ்ருதிஹாசன் எப்போதும் அவரின் instagram பக்கத்தில் ஆக்டிவாக பல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு கொண்டிருப்பார்.
அதேபோல் தன்னை பற்றிய அனைத்து தகவல்களையும் துணிச்சலாக திறந்த புத்தகம் போல் அனைவரிடமும் பகிர்ந்து கொள்வார். அதேபோல் தற்போது தனக்கு PCOS என்னும் கருப்பை நீர்கட்டி என்னும் பிரச்சனை உள்ளதாகவும் அதனை துணிச்சலுடன் எதிர்த்துப் போராடி வருவதாக வொர்க் அவுட் செய்து கொண்டிருக்கும் வீடியோவுடன் இணைத்து பதிவிட்டு இருக்கிறார். அதில் “என்னுடன் சேர்ந்து வொர்க் அவுட் செய்யுங்கள் . நான் தற்போது மோசமான ஹார்மோனல் பிரச்சனையான PCOS மற்றும் endometriosis என்னும் பிரச்சனைகளை சந்தித்து வருகிறேன். இது சமநிலையின்மை, வீக்கம் மற்றும் வளர்சிதைமாற்றம் போன்ற சவாலான போராட்டம், ஆனால் நான் இதை எதிர்த்து போராடுவதற்கு பதிலாக இந்த இயற்கையான பிரச்சனையை ஏற்றுக்கொள்ள தயாராகிவிட்டேன்.
ஆனால் எனது உடல்நிலை சீராக இல்லை என்றாலும் நான் நன்றாக சாப்பிட்டு, தூங்கி எழுந்து உடற் பயிற்சி செய்து வருகிறேன். இதை என்னால் செய்ய முடிகிறது என்று நான் நன்றி சொல்கிறேன்.எனது உடல் சரியாக இல்லை ஆனால் நான் மனதளவில் மகிழ்ச்சியாக இருப்பதனால் அந்த ஹார்மோனும் உடலில் பெருக்கெடுத்து ஓடட்டும். இது ஒரு பிரசங்கமாக தெரியலாம்! ஆனால் இந்த சவால் ஒரு பயணம் . அதனை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது “ என குறிப்பிட்டுள்ளார். இவர் இப்படி ஓப்பனாக தன்னுடைய உடல்நிலையை பற்றி பகிர்ந்து உள்ளதை பார்த்த ரசிகர்கள் நீங்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்று வாழ்த்து கூறி இந்த பதிவுடன் இருக்கக்கூடிய வீடியோவை இணையத்தில் வைரல் ஆக்கி வருகின்றனர்.
View this post on Instagram

