Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

நடிகை ஸ்ரீபிரியாவின் தாயார் மரணம்.. இரங்கல் தெரிவிக்கும் திரையுலக பிரபலங்கள்

shree-priya-mother-passes-away

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஸ்ரீபிரியா. ரஜினி கமல் உள்ளிட்ட பல்வேறு நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து தனது திரைப்படத்தை தொடங்கியவர் தற்போது படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

அது மட்டுமல்லாமல் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியில் இணைந்து அரசியலில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் நடிகை ஸ்ரீபிரியாவின் தாயார் கிரிஜா உடல் நலக் குறைபாடு காரணமாக சென்னையில் உள்ள அவரது வீட்டில் உயிரிழந்துள்ளார். தற்போது 88 வயதாகும் இவர் பரத நாட்டிய கலைஞர் காரைக்கால் நடேசன் பக்கிரி சாமியின் மனைவி ஆவார்.

அது மட்டுமல்லாமல் இவர் காதோடு தான் நான் பேசுவேன் என்ற படத்தை இயக்கி உள்ளார். அது மட்டுமல்லாமல் நீயா மற்றும் நட்சத்திரம் உள்ளிட்ட படங்களையும் இவர் தயாரித்துள்ளார். நடிகை ஸ்ரீபிரியா தன்னுடைய தாயாரின் மறைவு காரணமாக இரவில் இருந்து அழுது கொண்டே இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

shree-priya-mother-passes-away
shree-priya-mother-passes-away