குறுமிளகு பயன்படுத்தி தலை முடியை வளர்ப்பது எப்படி என்று பார்க்கலாம்.
தலைமுடி வளர குறுமிளகு மிகவும் சிறந்தது. ஆரோக்கியத்தை விட முடி வளர்ச்சிக்கு குறுமிளகு பெரும்பாலும் உதவுகிறது. கருப்பு மிளகு ஒரு பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஆக்சிஜனேற்றம் நிறைந்த மசாலாக்களில் ஒன்று.
இது மட்டும் இல்லாமல் இதில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் கே அதிகமாக இருப்பதால் முடி வளர பல வழிகளில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
குறுமிளகில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் பொடுகு தொல்லையை குறைத்து ரத்த ஓட்டத்தை சரி செய்வது மட்டுமில்லாமல், முடிக்கும் நல்ல பயன் அளிக்கிறது.
கருப்பு மிளகு எண்ணெயை பயன்படுத்துவதன் மூலம் பொடுகு பிரச்சனை மற்றும் மசாஜ் செய்வதனால் ரத்த ஓட்டம் சீராக இருக்கும்.
உச்சந்தலையில் இருக்கும் பூஞ்சை தொற்றுக்களை குறைக்க கருப்பு மிளகு எண்ணெய் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. சிலருக்கு தலையில் வீக்கம் ஏற்படும் போது முடி வேரில் வலுவிழந்து விழ ஆரம்பித்து விடும். அப்படி இருக்கும்போது நாம் கருப்பு நிலவு என்னை தடவி வந்தால் முடி உதிர்வது நின்று வளர்ச்சி நன்றாக இருக்கும். மேலும் உடல் ஆரோக்கியமாகவும் வாழலாம்.