Shooting on curfew Chandini is angry
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை பரவி நோயாளிகளால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. ஆனாலும் மக்கள் முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமலும் பொறுப்பற்று சுற்றுவதாக விமர்சனங்கள் கிளம்பின.
இதையடுத்து கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு 2 வாரங்கள் ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது. ஆனாலும் ஊரடங்கை மீறி கார், மோட்டார் சைக்கிள், வேன் உள்ளிட்ட வாகனங்களில் சாதாரண நாட்களைப்போல் பலர் சுற்றுவதாகவும், இதனால் ஊரடங்கு போட்டும் பயன் இல்லை என்றும் பலர் கண்டித்து வருகிறார்கள்.
சினிமா படப்பிடிப்புகளையும் தொடர்ந்து நடத்துவதாக குற்றம் சாட்டப்படுகிறது. இதனை சித்து பிளஸ்-2 படத்தில் நாயகியாக அறிமுகமாகி பில்லா பாண்டி, கவண், பாம்பு சட்டை, நய்யாண்டி, வில் அம்பு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள சாந்தினி கண்டித்து உள்ளார்.
“ஊரடங்கு என்பது முழுமையானதாகத்தானே இருக்க வேண்டும்? ஆனால் அதை மீறி சென்னையில் பல படப்பிடிப்புகள் மறைமுகமாக எப்படி நடந்து வருகின்றன. மக்களின் உயிர் முக்கியம். கொரோனா பரவலை தடுக்க வேண்டியது அவசியம். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இதில் கவனம் செலுத்தவும், தேவையான நடவடிக்கை எடுக்கவும் கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
The Grand Master Trailer | Abarnathi | Lingesh | Vettri Cheliyan | Suresh Menon
Sandakari Official Trailer | Vemal | Shriya Saran | R.Madhesh | Amrish
Mandavetti Teaser | Komalee Prasad | Saranraj Senthilkumar | Deepak Venugopal
ராமேஸ்வரம் கடலில் திதி கொடுப்பவர்கள் வீசும் சில்லறைக் காசுகளை நீருக்கடியில் நீந்திச் சென்று சேகரித்து, அதையே தனது வாழ்வாதாரமாகக் கொண்டு…
முதலமைச்சர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் ‘சிக்மா’ திரைப்படம் அக்டோபர் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள…
சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் சிவா, திஷா பாண்டே உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான நகைச்சுவை திரைப்படம் ‘தமிழ் படம்’.…