மகன் படத்தின் ரிலீஸுக்காக விலகிய அப்பா படம்! ‘திருப்பாச்சி’ ரீ-ரிலீஸ் ஒத்திவைப்பு

முதலமைச்சர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் ‘சிக்மா’ திரைப்படம் அக்டோபர் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், விஜய் – திரிஷா நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படமான ‘திருப்பாச்சி’யின் ரீ-ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக அக்டோபர் 1-ம் தேதி ‘திருப்பாச்சி’ திரைப்படத்தை மீண்டும் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில், விநியோகஸ்தர்களான திருப்பதி ஃபிலிம்ஸ் ரீ-ரிலீஸ் தேதியை ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளனர்.

புதிய இயக்குநர்களின் படைப்புகளுக்கும், புதிய திரைப்படங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் ‘திருப்பாச்சி’ ரீ-ரிலீஸை தற்காலிகமாக தள்ளிவைப்பதாக விநியோகஸ்தர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சிக்மா’ திரைப்படம் அக்டோபர் 2-ம் தேதி வெளியாகிறது. விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜனநாயகன்’ திரைப்படத்துடன் ‘சிக்மா’ மோதுவதைத் தவிர்க்கும் வகையில், அதன் வெளியீடும் அக்டோபர் மாதத்திற்கு மாற்றப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இயக்குநர் பேரரசுவின் அறிமுகப் படமாக 2005-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான ‘திருப்பாச்சி’, விஜய் – திரிஷா நடிப்பில் உருவான ஆக்‌ஷன் மற்றும் குடும்ப உணர்வுகள் கலந்த கமர்ஷியல் திரைப்படமாக ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்படம் பின்னர் பிற மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது.

இதற்கிடையே, வெளிநாடுகளில் திட்டமிட்டபடி அக்டோபர் 2-ம் தேதி ‘திருப்பாச்சி’ ரீ-ரிலீஸ் செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால், தமிழகத்தில் இப்படத்தின் புதிய ரீ-ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘சிக்மா’ வெளியாகும் நேரத்தில் ‘திருப்பாச்சி’யும் வெளியானால் அப்பா – மகன் படங்கள் ஒரே நேரத்தில் திரைக்கு வரும் சூழல் உருவாகும் என்பதால், தமிழகத்தில் ரீ-ரிலீஸ் தேதி மாற்றப்பட்டதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.

அக்டோபர் 1-ம் தேதி ராம் இயக்கத்தில் நிவின் பாலி, சூரி, அஞ்சலி நடித்துள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’, விஜய் சேதுபதி – லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் உருவாகியுள்ள ‘பத்தா’ உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகவுள்ளன. மேலும், லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் நிறுவனம் வழங்கும் ‘மிஸ்டர் பாரத்’ திரைப்படமும் அன்றைய தினம் வெளியாகிறது.

Suresh

Recent Posts

The Grand Master Trailer

The Grand Master Trailer | Abarnathi | Lingesh | Vettri Cheliyan | Suresh Menon

2 hours ago

Sandakari Official Trailer

Sandakari Official Trailer | Vemal | Shriya Saran | R.Madhesh | Amrish

2 hours ago

Mandavetti Teaser

Mandavetti Teaser | Komalee Prasad | Saranraj Senthilkumar | Deepak Venugopal

2 hours ago

என்ன விலை திரை விமர்சனம்

ராமேஸ்வரம் கடலில் திதி கொடுப்பவர்கள் வீசும் சில்லறைக் காசுகளை நீருக்கடியில் நீந்திச் சென்று சேகரித்து, அதையே தனது வாழ்வாதாரமாகக் கொண்டு…

2 hours ago

‘தமிழ் படம் 3’ குறித்து முக்கிய அப்டேட் கொடுத்த சிவா!

சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் சிவா, திஷா பாண்டே உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான நகைச்சுவை திரைப்படம் ‘தமிழ் படம்’.…

3 hours ago

நடிகை டிஸ்கோ சாந்திக்கு என்ன ஆனது? மருத்துவமனையில் அனுமதி; ரசிகர்கள் அதிர்ச்சி!

தமிழ், தெலுங்கு திரையுலகில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் டிஸ்கோ சாந்தி. சினிமாவில் பிசியாக இருந்தபோதே பிரபல தெலுங்கு நடிகர்…

3 hours ago