ரஜினிகாந்த் பட ஷுட்டிங் ஸ்பாட்டில் குவிந்த ரசிகர்கள். வைரலாகும் புகைப்படம்

ஜெயிலர் படத்தைத் தொடர்ந்து ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் என்ற படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வருகிறார்.வேட்டையன் திரைப்படத்தில் நடிகர்-நடிகைகள் அமிதாப்பச்சன், பகத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.இதன் முதல்கட்ட படப்பிடிப்பு திருவனந்தபுரம், திருநெல்வேலி, மும்பை ஆகிய இடங்களில் நடந்தது. அடுத்த கட்ட படப்பிடிப்பு புதுச்சேரி தேங்காய்திட்டு பழைய துறைமுகத்தில் நடந்து வருகிறது.நேற்று ரஜினி நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டது.

இதற்காக புதுச்சேரி நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்த ரஜினி படப்பிடிப்பில் பங்கேற்றார். ரஜினியை காண ஏராளமான ரசிகர்கள் திரண்டனர். படப்பிடிப்பு முடிந்த பின் கேரவன் செல்லும் போதும், மீண்டும் ஒட்டலுக்கு திரும்பும் போதும் ரசிகர்களை பார்த்து ரஜினி கை அசைத்தபடி சென்றார். இன்றும் ரஜினி நடிக்கும் காட்சிகள் படமாக்கப்படுகிறது.ரஜினியை பார்க்க ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். இதனால் போலீஸ் பாதுகாப்புடன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. தொடர்ந்து 3 நாட்கள் புதுச்சேரியில் படப்பிடிப்பு நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.”,

shooting-of-vettaiyan-in-puducherry
jothika lakshu

Recent Posts

Mookuthi Amman 2 Maha Sakthi Teaser

Mookuthi Amman 2 Maha Sakthi Teaser (Tamil) | Nayanthara | Sundar C | Hiphop Tamizha…

4 hours ago

ஆலியா பட் மெய்க்காப்பாளர் செயலால் கொந்தளித்த நெட்டிசன்கள்!

நடிகை ஆலியா பட்டை நேரில் பார்த்ததும் உற்சாகமடைந்த ரசிகர்கள், அவரைச் சூழ்ந்துகொண்டு புகைப்படம் எடுக்க முயன்றனர். அப்போது கூட்டத்தில் இருந்த…

7 hours ago

பிரபாஸ் போன்ற நல்ல மனிதரை பார்ப்பது அரிது – நடிகர் ஜிதின் குலாட்டி

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான பிரபாஸ், தொடர்ந்து பிரம்மாண்டமான படங்களில் நடித்து இந்திய அளவில் கவனம் ஈர்த்து வருகிறார். அந்த…

7 hours ago

மயோசிடிஸ் நோயால் என் அடையாளத்தையே இழந்துவிட்டதாக உணர்ந்தேன் – நடிகை சமந்தா

நடிகை சமந்தா, சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனக்கு ஏற்பட்ட மயோசிடிஸ் பாதிப்பு குறித்தும், அந்த காலகட்டத்தில் தான் எதிர்கொண்ட…

8 hours ago

தீபிகா படுகோனேவின் கர்ப்பகால போட்டோஷூட் வைரல்!

நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்துகொண்ட தீபிகா படுகோனேவுக்கு, கடந்த 2024-ம் ஆண்டு செப்டம்பர் 8-ம் தேதி துவா…

8 hours ago

அஜித்துடனான பயணம் தான் என்னை உயர்த்தியது – எடிட்டர் விஜய் வேலுக்குட்டி

தமிழ் திரையுலகின் முன்னணி படத்தொகுப்பாளர்களுள் ஒருவராக வலம் வரும் விஜய் வேலுக்குட்டி, கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்தார் 2’ திரைப்படத்தின்…

9 hours ago