தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய் இவரது மகன் ஜேசன் சஞ்சய். இவர் தற்போது முதல் முறையாக தமிழில் ஒரு படத்தை இயக்கி வருகிறார்.
இந்தப் படத்தின் கதாநாயகனாக சந்திப் கிஷன் நடித்துவரும் நிலையில் லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.மேலும் இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு வட சென்னையில் தொடங்கி அடுத்தடுத்து பிஸியாக நடைபெற்று வருகிறது. தற்போது இந்த படத்தின் இறுதி கட்டப்படப் பிடிப்பு பேங்க்காக் நகரில் நடைபெற்று வருவதாகவும் இன்னும் இரண்டு நாட்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவு பெறும் என்றும் சொல்லப்படுகிறது.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.
