Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பீஸ்ட் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து படக்குழு வெளியிட்ட தகவல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்

Shocking Update on Beast Movie Audio Launch

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் ஏப்ரல் 13-ஆம் தேதி அல்லது ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாக உள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்தப் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க அனிருத் இசையமைத்து வருகிறார்.

படத்தின் படப்பிடிப்புகள் முழுமையாக முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்த நேரத்தில் பீஸ்ட் படத்தின் இசை வெளியீட்டு விழா இந்த மாத இறுதியில் நேரு ஸ்டேடியம் அல்லது சாய்ராம் கல்லூரியில் நடைபெற இருப்பதாக தகவல்கள் கசிந்து இருந்தன.

மேலும் இந்த நிகழ்ச்சி முதல்வர் ஸ்டாலின் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உட்பட பல்வேறு திரைப்பிரபலங்கள் பங்கேற்க இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் இதுகுறித்து படக்குழு தரப்பில் இருந்து அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் பிஸியாக நடைபெற்று வருகின்றன. மொத்த யூனிட்டும் இதில்தான் கவனம் செலுத்தி வருகிறது. இசை வெளியீட்டு விழாவை நடத்தும் எண்ணம் தற்போதைக்கு இல்லை என் கூறியுள்ளனர் இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Shocking Update on Beast Movie Audio Launch
Shocking Update on Beast Movie Audio Launch