Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பொன்னியின் செல்வன் படம் பார்ப்பதில் வந்த சிக்கல்.. பதற்றத்தில் ரசிகர்கள்..!

shocking news about ponniyin selvan1 movie update

இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் பிரம்மாண்ட படைப்பான திரைப்படம் தான் “பொன்னியன் செல்வன்”. இப்படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ஆம் தேதியான இன்று அனைத்து திரையரங்குகளிலும் பிரம்மாண்டமாக வெளியாகி உள்ளது. லைக்கா நிறுவனம் தயாரிப்பில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து இருக்கும் இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயராம், பார்த்திபன், சரத்குமார் போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

மாபெரும் பொருட்சளவில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக சென்று படம் பார்த்து வருகின்றனர். இந்நிலையில் சேலத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியான 5 திரையரங்குகளில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ரசிகர்கள் ஆரவாரத்துடன் படம் பார்த்துக் கொண்டிருந்த நிலையில் சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே 5 திரையரங்குகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீரென்று சோதனை நடத்தியுள்ளனர்.

அந்த சோதனையில் காலாவதியான குளிர்பானங்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், சம்பந்தப்பட்ட திரையரங்குகளுக்கு அபராதம் விதித்துள்ளனர். இதனால் அங்கு சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளதால் ரசிகர்களுக்கு படம் பார்ப்பதற்கு தடை ஏற்பட்டுள்ளது. இந்த அதிர்ச்சியான தகவல் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

shocking news about ponniyin selvan1 movie update
shocking news about ponniyin selvan1 movie update