Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சூரிக்கு வந்த சிக்கல்.. கொந்தளித்த நெட்டிசன்கள்

shocking news about comedy actor soori

தமிழ் சினிமாவில் பிரபல காமெடி முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சூரி. வெண்ணிலா கபடி குழு என்ற படத்தின் மூலம் அனைவருக்கும் பரிச்சயமான இவர் வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படத்தின் மூலம் அனைவருக்கும் ஃபேவரிட் காமெடியனாக ஆகிவிட்டார்.

அதற்குப் பிறகு பல படங்களில் தனது காமெடியை தெறிக்க விட்டு வரும் நடிகர் சூரி தற்பொழுது ஹீரோவாக விடுதலை என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் சூரி இன்று 75 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் மோடியின் அறிவுறுத்தலின்படி தனது வீட்டின் முன்பு தேசிய கொடியை ஏற்றி வைத்த புகைப்படத்தை பதிவிட்டிருக்கிறார். அது தற்பொழுது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

அதாவது அந்த புகைப்படத்தில் நடிகர் சூரி வீடு துடைக்கும் மாப் ஸ்டிக்கில் தேசிய கொடியை கட்டி பறக்க வைத்திருக்கிறார். அதனைக் கண்ட ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் கொந்தளித்து இணையத்தில் அவரை வறுத்தெடுத்து வருகின்றனர்.