shivarajkumar-opens-up-actor-vijay
இந்திய திரையுலகில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் விஜய். தமிழ் மட்டுமின்றி தென்னிந்திய மாநிலங்களிலும் நடிகர் விஜய்க்கு ரசிகர்கள் ஏராளம். இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் கோட் படத்தில் நடித்து வருகிறார். சினிமா மட்டுமின்றி அரசியலிலும் கால்பதிக்கும் நோக்கில் நடிகர் விஜய் பல்வேறு நலத்திட்ட பணிகளை பொதுவெளியில் செய்ய துவங்கியுள்ளார். நடிகர் விஜய் அரசியலில் களமிறங்குவது பற்றி பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில், கன்னட நடிகர் சிவராஜ்குமார் நடிகர் விஜய் அரசியல் வருகை குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், \”எனது 100-வது படம் தொடர்பான விழாவில் நடிகர் விஜய் மற்றும் சூர்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.
விஜய்யின் படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். விஜய்யிடம் வித்தியாசமான ஸ்டைல் இருக்கு. அவர் மிகவும் கடினமாக உழைத்திருக்கிறார். அவர் ஒரே இரவில் ஸ்டார் ஆனவர் இல்லை. அவர் நிறைய கஷ்டப்பட்டிருக்கார்.\”\”அவர் தனது தோற்றம், நடிக்கும் விதம், கதைகளை தேர்வு செய்யும் விதம் என அனைத்திலும் முழுமையாக தன்னை செதுக்கிக் கொண்டிருக்கிறார். இவ்வாறு முன்னேறுபவர்களை எங்களுக்கு மிகவும் பிடிக்கும். அவர் மாணவர்களுக்கு உதவி செய்து, அவர்களுடன் உரையாடும் வீடியோவை பார்த்தேன். அவரை பற்றி நல்ல விதமாக உணர்கிறேன்.\”\”அரசியலுக்கு வருவதற்கான திறன் அவரிடம் இருக்கு. அவர் தன்னை மிகவும் நம்புகிறார். அந்த நம்பிக்கை மக்களுக்கும் பிடித்துள்ளது. நடிகர் அரசியலுக்கு வந்தால், ஏன் வரவேண்டும் என்பார்கள். மக்கள் அவரை ஏற்றுக் கொள்கிறார்கள். அவரிடம் அதற்கான ஆளுமை இருக்கிறது,\” என தெரிவித்தார்.
விஜய் ரசிகர்களுக்கு 'நல்ல' செய்தி - விரைவில் 'ஜனநாயகன்' ரிலீஸ்..? விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' படம் ரிலீஸ் தொடர்பாக, பலரும்…
கமல் வழியில் கலக்கல்...அமெரிக்காவில் ஏ.ஐ. படிக்கச் சென்ற சிம்பு! வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு 'அசுரன்' படத்தில் நடித்து வருகிறார். அவரின்…
தயாரிப்பாளராக புதிய அவதாரம் எடுத்த நித்யா மேனன்! வரலட்சுமி சரத்குமார் 'சரஸ்வதி' என்ற படத்தை தயாரித்து இயக்குநராகவும் அறிமுகமாக உள்ளார்.…
"அஜித் படத்தில் இணையும் மோகன்லால்" அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான ‘குட் பேட் அக்லி’ ரசிகர்கள் மத்தியில்…
தெலுங்கு திரையில் வில்லனாக களம் இறங்கினார் கார்த்தி கைதி-2 படம் எப்போது தொடங்கும் என்பது கேள்விக்குறி ஆகியுள்ளது. இந்நிலையில், கார்த்தி…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள்…