விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிதான் “குக்வித் கோமாளி”. இந்நிகழ்ச்சியின் பிரபல கோமாளிகளில் ஒருவராக மக்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் சிவாங்கி. தற்போது இந்நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நடைபெற்று வருகிறது.
அதில் போனவாரம் வெளியான ஷோவில் சிவாங்கி வரவில்லை. அதனால் இந்த வார நிகழ்ச்சியில் சிவாங்கி கண்டிப்பாக கலந்து கொள்வார் என்று ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் இந்த வார நிகழ்ச்சியிலும் சிவாங்கி வரவில்லை.l
ஏனென்றால் அவரின் அண்ணனின் திருமணத்திற்காக சென்றுள்ளதால் சிவாங்கி இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை என்றும் அவருக்கு பதிலாக சரத் அவர்கள் இந்த வார கோமாளியாக பங்கேற்று இருக்கிறார் என்ற காரணத்தை நேற்றைய எபிசோடில் தொகுப்பாளர் ரக்க்ஷன் கூறியுள்ளார் .
