Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறப் போவது யார் தெரியுமா? வைரலாகும் அப்டேட்

Sherina Evicted from Bigg Boss 6 tamil

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். ஆறாவது சீசன் கோலாகலமாக தொடங்கி விறுவிறுப்பாக சண்டையும் சர்ச்சையுமாக ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் இருந்து முதல் வாரத்தில் ஜிபி முத்து தன்னுடைய மகனின் உடல் நலக் குறைபாடு காரணமாக வெளியேறிக் கொண்ட நிலையில் சாந்தி எலிமினேஷனில் வெளியேற்றப்பட்டார்.

அவரைத் தொடர்ந்து அடுத்த படியாக இந்த நிகழ்ச்சியில் இருந்து அசல் கோளாறு வெளியேறினார். இவர்கள் இருவரை தொடர்ந்து மூன்றாவது எலிமினேஷன் இன்று நடைபெற உள்ளது. ஏற்கனவே கிடைத்த தகவலின்படி ஷெரீனா தான் குறைந்த ஓட்டுக்களுடன் கடைசி இடத்தில் இருக்கிறார் என தெரியவந்தது.அதன்படி பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியவரும் ஷெரினா தான் என தெரியவந்துள்ளது. இன்றைய எபிசோடில் இது குறித்த காட்சிகள் இடம் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Sherina Evicted from Bigg Boss 6 tamil
Sherina Evicted from Bigg Boss 6 tamil