Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

விவாகரத்தில் முடிந்த நடிகை ஷீலா ராஜ்குமாரின் திருமண வாழ்க்கை. அதிர்ச்சியில் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்து வருபவர் ஷீலா ராஜ்குமார். தியேட்டர் ஆர்டிஸ்ட்டாக சினிமாவில் நுழைந்து யதார்த்தமான நடிப்பை கொடுத்து வரும் இவர் கடந்த வருடம் பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி தம்பி சோழன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

வித்தியாசமான முறையில் கடலுக்கு நடுவே நடந்த இவர்களது திருமணம் தமிழ் சினிமாவின் பலரின் கவனத்தை ஈர்த்தது. இருப்பினும் இவர்கள் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து தனித்தனியே வாழ்ந்து வந்தனர்.

இந்த நிலையில் சில ராஜ்குமார் விவாகரத்து பெற்று தன்னுடைய கணவரை பிரிவதாக அறிவித்துள்ளார். இது குறித்த பதிவில் திருமண வாழ்க்கையில் இருந்து வெளியேறுகிறேன் என அறிவித்துள்ளார்.

இந்த பதிவை பார்த்து ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Sheela Raj Kumar divorce update
Sheela Raj Kumar divorce update