சினிமாவில் நடிக்காமல் இருந்ததற்கு அவள்தான் காரணம் – கவுதமி

தமிழ் திரையுலகில் 1980 மற்றும் 90-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த கவுதமி தற்போது அரசியலில் ஈடுபட்டு வருகிறார். அவர் அளித்த பேட்டி வருமாறு:-

”நான் சினிமாவுக்கு வருவேன் என்றோ அரசியலில் ஈடுபடுவேன் என்றோ நினைத்து பார்க்கவில்லை. ஆந்திராவில் பிறந்த நான் எம்.பி.ஏ படிக்க வேண்டும் என்ற ஆசையோடு இருந்தேன். ஆனால் குரு சிஷ்யன் படத்தில் நடித்த பிறகு திரும்பி பார்க்கவே நேரம் இல்லை. வருடத்துக்கு 15 படங்கள் வரை நடித்தேன். ஏழரை வருடங்களில் 120 படங்களில் நடித்து விட்டேன். அது பெரிய சாதனை.

சினிமாவால் வாழ்க்கையில் சில விஷயங்களை இழக்கிறோம் என்று தோன்றியது. அதன்பிறகு சினிமாவை விட்டு விலக முடிவு செய்தேன். திருமணம் ஆகி 3 ஆண்டுகளில் அந்த உறவு அறுந்து போனது. ஆனாலும் எனது வாழ்க்கையில் நான் தனிமையாக இல்லை. எனக்குள்ளேயே நான் இருக்கிறேன். எந்த விஷயம் ஆனாலும் எனது மகளிடம் மனம் விட்டு பேசுகிறேன்.

எனது கடந்த காலம், நிகழ்காலம் எல்லாம் அவளுக்கு தெரியும். எனது மகள் சுப்புலட்சுமிக்கு சினிமாவில் நடிக்க ஆர்வம் இல்லை. கேமராவுக்கு பின்னால் இருக்கத்தான் அவளுக்கு பிடிக்கிறது. சினிமாவில் நடிக்க வேண்டும் என்றாலும் எனக்கு ஆட்சேபனை இல்லை. எல்லாம் அவளுடைய விருப்பம்தான். இத்தனை காலம் சினிமாவில் நடிக்காமல் இருந்ததற்கு எனது மகள்தான் காரணம். இப்போது அவள் செட்டிலாகி விட்டதால் இனிமேல் சினிமாவில் நடிக்க நான் தயாராக இருக்கிறேன்.’

இவ்வாறு கவுதமி கூறினார்.

Suresh

Recent Posts

ரிலீஸ் தேதியில் மாற்றம்.. முன்கூட்டியே வெளியாகும் ‘காளிதாஸ் 2’!

பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…

1 week ago

“வி.ஜே. பார்வதி பற்றி பேச எதுவும் இல்லை..” – விஜய் சேதுபதி

இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…

1 week ago

என் அழகைப் பார்த்து ரசிகர்கள் மனைவியிடம் சொல்வது இதுதான்! – ஷில்பா மஞ்சுநாத்

தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…

1 week ago

Naana Mastana – Video Song

https://youtu.be/I3oG_R6Mqzo?si=XptwLOUuHy-mFlAD

1 week ago

Kenatha Kanom (Video Song)

Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…

1 week ago

Perambur Gaana song

https://youtu.be/2Sz1o1NqKL4?si=aMNbe_Gg3w2EQqQY

1 week ago