இந்துக்களுக்கு உதவி வேண்டாம் – ஸ்டாலினுக்கு பிரபல இயக்குனர் கோரிக்கை

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடக்கிறது. இதற்காக அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் அறிக்கையை வெளியிட்டு வருகிறார்கள். இதில் திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்துக்களின் புனித யாத்திரைக்கு நிதியுதவி அளிக்கப்படும் என்று கூறப்பட்டது. இதற்கு பிரபல இயக்குனர் பேரரசு இந்துக்களுக்கு உதவி வேண்டாம் என்று கூறி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், ‘திமுக தலைவர் மரியாதைக்குரிய திரு.ஸ்டாலின் அவர்களுக்கு, தங்கள் தேர்தல் அறிக்கையில் இந்துக்களின் புனித யாத்திரைக்கு நிதியுதவி அளிப்பதாய் கூறியிருந்தீர்கள் மகிழ்ச்சி! ஆனால் இந்துக்களுக்கு அந்த உதவி வேண்டாம். வேறொரு உதவி செய்யுங்கள்.

இந்து மதத்தின் புனிதத்தை கெடுக்கும்படி பேசுபவர்களை கிட்டே சேர்க்காதீர்கள், இந்துமதத்தை இழிவாய் பேசுபவர்களோடு கூட்டணி வைக்காதீர்கள், உங்கள் கட்சியில் இந்து மதத்தை கேலி, கிண்டல் செய்து அதன் புனிதத்தை கெடுப்பவர்களை உங்கள் கட்சியைவிட்டே தூக்குவேன் என்று உறுதியளியுங்கள், இந்து மதத்தை மட்டுமல்ல யார் எந்த மதத்தை இழிவு படுத்தினாலும் தூக்கி எறியுங்கள், எங்களுக்கு இன்னொரு ஆசை தேர்தல் அறிக்கையில் மட்டுமின்றி உங்கள் இதயத்திலும் இந்து மதத்தின் மீது மரியாதை இருந்தால் நன்றாக இருக்கும்’ இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Suresh

Recent Posts

குஷ்புவின் மகள்கள் மீதான உருவக்கேலிக்கு ராதிகா கடும் கண்டனம்

சமூக வலைதளங்களில் தனது மகள்களை குறிவைத்து அவதூறு மற்றும் கேலி பதிவுகளை வெளியிடுபவர்களுக்கு நடிகை குஷ்பு சுந்தர் கடுமையாக எச்சரிக்கை…

3 days ago

“தாய்லாந்தில் ஜெயராமுடன் பிச்சை எடுத்து ரூ.100 சம்பாதித்தோம்!” – நடிகை பாவனா பகிர்ந்த சுவாரஸ்ய அனுபவம்

தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக விளங்கும் பாவனா, 'ஹேப்பி ஹஸ்பண்ட்ஸ்' படப்பிடிப்பின் போது நடந்த மறக்க…

3 days ago

‘கட்டா குஸ்தி 2’ பார்த்து பாராட்டிய ரஜினிகாந்த்… விஷ்ணு விஷால் நெகிழ்ச்சி!

நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடி வரும் 'கட்டா குஸ்தி 2' திரைப்படத்தை பார்த்துவிட்டு, சூப்பர் ஸ்டார்…

3 days ago

ஹிப்ஹாப் ஆதியின் ‘மீசைய முறுக்கு 2’… செப்டம்பரில் ரிலீஸ்?

இளம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ஹிப்ஹாப் தமிழா ஆதியின் 'மீசைய முறுக்கு' திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த…

3 days ago

விம்பிள்டன் 2026: இந்திய பிரபலங்களின் ஸ்டைலான ஃபேஷன் அணிவகுப்பு!

உலகின் புகழ்பெற்ற டென்னிஸ் தொடரான விம்பிள்டன் 2026, இந்த ஆண்டும் விளையாட்டுடன் சேர்த்து ஃபேஷன் உலகின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. உலக…

3 days ago

Boomer Man Official Trailer

Boomer Man Official Trailer | Ajith Gill , Karthik Kumar | THI KI | Vivek…

4 days ago