Wimbledon 2026 Indian Celebrities Spotted At This Year's Grand Slam
உலகின் புகழ்பெற்ற டென்னிஸ் தொடரான விம்பிள்டன் 2026, இந்த ஆண்டும் விளையாட்டுடன் சேர்த்து ஃபேஷன் உலகின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. உலக நட்சத்திரங்களுடன் இந்திய திரையுலக மற்றும் கிரிக்கெட் பிரபலங்களும் தங்களது ஸ்டைலான தோற்றங்களால் ரசிகர்களை கவர்ந்தனர்.
நடிகை அனன்யா பாண்டே, விம்பிள்டனில் தனது முதல் வருகையிலேயே அடர் சிவப்பு நிற உடையில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
பிரியங்கா சோப்ரா, இந்த முறை இரண்டு வித்தியாசமான லுக்ஸில் ரசிகர்களை கவர்ந்தார். முதலில் ஆஃப்-வைட் நிற உடையுடன் ஸ்டைலான பண்டானா அணிந்து மாடர்ன் தோற்றத்தில் வந்தார். பின்னர் வெள்ளை நிற ஹால்டர்-ஸ்டைல் ஆடையில் மீண்டும் தோன்றி ஃபேஷன் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார். அவருடன் முன்னாள் பிரபஞ்ச அழகி லாரா தத்தா நீல நிற சம்மர் டிரஸ்ஸில் போஸ் கொடுத்தார். நடிகை ஆயிஷா கான் சிவப்பு நிற உடையில் கலந்துகொண்டு அனைவரின் கவனத்தையும் பெற்றார்.
தென்னிந்திய நடிகைகளில் ஸ்ரீலீலா, தனது விம்பிள்டன் அறிமுகத்தில் ஸ்ட்ரைப் பேன்ட் சூட்டில் அல்ட்ரா-சிக் தோற்றத்தில் மிளிர்ந்தார். கல்யாணி பிரியதர்ஷன், நீலம்-வெள்ளை கோடுகள் கொண்ட அசிமெட்ரிக்கல் உடையில் நேர்த்தியான தோற்றத்தை வெளிப்படுத்தினார்.
கிரிக்கெட் உலகின் பிரபலங்களும் ஃபேஷனில் பின்தங்கவில்லை. சச்சின் டெண்டுல்கர், கோடுகள் கொண்ட சூட்டில் கம்பீரமாக வந்தார். அவரது மனைவி அஞ்சலி, பச்சை நிற ஷர்ட் டிரெஸ்ஸில் எளிமையாகவும் அழகாகவும் காட்சியளித்தார்.
இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில், செக் பிளேஸர், ஐவரி பேண்ட் மற்றும் நீல நிற சட்டையுடன் ஸ்மார்ட் லுக்கில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
அதேபோல் யுவராஜ் சிங், அபிஷேக் சர்மா, வைபவ் சூர்யவன்ஷி உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்களும் ஃபார்மல் உடைகளில் பங்கேற்றனர். ஷிகர் தவான் மற்றும் அவரது மனைவி சோஃபி ஷைன் ஒரே மாதிரியான ஆடைகளில் ஸ்டைலாக தோன்றினர்.
மேலும் அர்ச்சனா பூரன் சிங் – பர்மீத் சேத்தி தம்பதியர் ஆஃப்-வைட் மற்றும் சாம்பல் நிற பேன்ட் சூட்டில் கவனம் ஈர்த்தனர். பிரபல கன்டென்ட் கிரியேட்டர் தர்ணா துர்கா, பீஜ் நிற உடையில் தனது விம்பிள்டன் அறிமுகத்தை ஸ்டைலாக பதிவு செய்தார்.
விளையாட்டைத் தாண்டி, விம்பிள்டன் 2026 இந்திய சினிமா மற்றும் கிரிக்கெட் பிரபலங்களின் ஃபேஷன் அணிவகுப்பாகவும் மாறி, சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
கானா பாடகரான ஹிப்ஹாப் ஆதி, கானா இசையை உலகளவில் கொண்டு செல்ல வேண்டும் என்ற கனவுடன் பயணிக்கிறார். பல்வேறு மேடைகளில்…
தெலுங்கானாவில் ஒடுக்கப்பட்ட பழங்குடியின மக்கள் வறுமையிலும் அடிமைத்தனத்திலும் வாழ்கின்றனர். அவர்கள் வசிக்கும் ‘பாரடைஸ்’ பகுதியின் அதிகாரமிக்க தலைவனாக மோகன் பாபு…
அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘டிராகன்’…
ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில், நானி, கயாடு லோஹர், சோனாலி குல்கர்னி, மோகன் பாபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘தி பாரடைஸ்’…
‘லப்பர் பந்து’ படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், நடிகர் தனுஷின் 56-வது திரைப்படமான…
வித்தியாசமான விதிமுறைகள் மற்றும் எதிர்பாராத திருப்பங்களுடன் பரபரப்பாக நடைபெற்று வரும் பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில், இந்த வார…