தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. நெல்சன் திலீப் குமார் இந்த படத்தை இயக்க அனிருத் இசையமைத்துள்ளார்.
மேலும் படத்தில் பூஜா ஹெக்டே நாயகியாக நடிக்க அபர்ணா தாஸ் விஜய்யின் தங்கையாக நடித்துள்ளார். மேலும் செல்வராகவன், கிங்ஸ்கி என எக்கச்சக்கமான திரையுலக பிரபலங்கள் இந்த படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.
ஏப்ரல் 13-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ள இந்தப் படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இந்த டிரைலரை ஷாருக்கான் இயக்குனர் அட்லி கூட அமர்ந்து பார்த்துள்ளார்.
ட்ரெய்லரை பாராட்டியுள்ள அவர் தளபதி விஜய்யின் ரசிகர்களில் நானும் ஒருவன் என தெரிவித்துள்ளார். இவருடைய இந்த பதிவு இணையத்தில் காட்டுத் தீயாக பரவி வருகிறது.
Sitting with @Atlee_dir who is as big a fan of @actorvijay as I am. Wishing the best for beast to the whole team…trailer looks meaner…. Leaner… stronger!!https://t.co/dV0LUkh4fI
— Shah Rukh Khan (@iamsrk) April 5, 2022