சாந்தனுவின் “மெஜந்தா” பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
திரையுலகில் வாரிசு நடிகர்கள் வருவது இயல்பு. அதில் தனித்திறமையுடன் நிற்பவர்கள் குறைவு. இது தொடர்பான தகவல் பார்ப்போம்..
கே.பாக்யராஜின் மகன் சாந்தனு ‘சக்கரைகட்டி’ என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து சில படங்களில் வெற்றிகண்ட சாந்தனு, சில படங்களில் தோல்வியும் சந்தித்து வந்தார்.
சாந்தனு நடிப்பில் ‘முருங்கைக்காய் சிப்ஸ்’ என்ற படம் வரவேற்பை பெற்றது.பின்னர் வெளியான ‘இராவண கூட்டம்’ படமும் கவனத்தை ஈர்த்தது.
தற்போது, பரத்மோகன் இயக்கத்தில், சாந்தனு பாக்யராஜ், அஞ்சலி நாயர் ஆகியோர் நடிக்கும் படம் ‘மெஜந்தா’.மேலும் படவா கோபி, ஆர்.ஜே.ஆனந்தி, பக்ஸ் என்ற பகவதி பெருமாள், சரத்ரவி, அர்ச்சனா ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தரண்குமார் இசை அமைக்கும் இப்படத்துக்குப் பல்லு ஒளிப்பதிவு செய்துள்ளார். இதை, பிராண்ட் பிளிட்ஸ் என்டர்டெயின்மென்ட் சார்பில் டாக்டர் ஜேபி லீலாராம், ரேகா லீலாராம் மற்றும் ராஜு வழங்குகின்றனர்.
‘காதல், நகைச்சுவை கலந்த இது, ‘ஃபீல்- குட்’ படமாக உருவாகியுள்ளது. அவள் சூரிய உதயம், அவன் அந்தி சாயும் நேரம். இருவரும் ஒருபோதும் சந்திக்க விரும்ப மாட்டார்கள். பிரபஞ்சம் இவர்களை ஒரே புள்ளியில் இணைக்கும்போது என்ன நடக்கிறது என்பது ஒன் லைன். திரைக்கதை மட்டுமல்ல, விஷூவலாகவும் சிறப்பான படமாக இது இருக்கும்’ என படக்குழு தெரிவித்துள்ளது. இந்நிலையில் இதன் முதல் தோற்ற போஸ்டர் வெளியிடப்பட்டு உள்ளது.


