Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

இலக்கியா சீரியலில் இருந்து விலகிய ஹீமா பிந்து.. ரசிகர்கள் ஷாக்

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று இலக்கியா. இந்த சீரியலில் நாயகியாக ஹீமா பிந்து நடிக்க நந்தன் லோகநாதன் ஹீரோவாக நடித்து வருகிறார்.

இதயத்தை திருடாதே சீரியல் மூலம் ரசிகர்களை கவர்ந்த ஹீமா பிந்து இந்த சீரியலிலும் எதார்த்தமான நடிப்பை கொடுத்து வந்தார். ஆனால் சீரியல் சினிமா என இரண்டிலும் கவனம் செலுத்த முடியாத காரணத்தினால் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகிறது. இந்த சீரியல் எந்த தொந்தரவும் இல்லாமல் செல்ல வேண்டும் என்ற காரணத்தினால் கனத்த இதயத்துடன் சீரியலில் இருந்து வெளியேற முடிவு எடுத்ததாக அறிவித்துள்ளார்.

தன்னுடைய இந்த முடிவு யாரையாவது வருத்தப்பட செய்தால் அதற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக கூறியுள்ளார். மேலும் தற்போது புதிய இலக்கியாவாக கண்மணி சீரியல் பிரபலம் ஷாம்பவி நடிக்க தொடங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Shambhavi in ilakiya serial
Shambhavi in ilakiya serial